For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதறகாகவே எதையாவது கூறிவிட்டு அதில் ஆதாயம் தேட நினைப்பார்.

பொதுவாக அவர் கூறுவது எல்லாமே சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். இது போல் அண்மையில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

அந்த வீடியோவில் அவர் காஜ்வா இ ஹிந்த் என்ற ஒரு வரியை பயன்படுத்தினார். இந்த வரி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு அர்த்தம் என்ன என கண்டுபிடிக்க நெட்டிசன்கள் முயன்றார்கள். காஜ்வா இ ஹிந்த் என்றால் இந்தியாவுக்கான தீர்க்க தரிசனப் போர் என சில உருதுமொழி பேராசிரியர்கள் விளக்கினர்.

முஸ்லீம் போர் வீரர்கள்

முஸ்லீம் போர் வீரர்கள்

இந்துக்களுடன் போரில் ஈடுபட்டு முஸ்லீம் போர் வீரர்கள் இந்தியாவை கைப்பற்றுவது என்ற அர்த்தம் என கூறினார்கள். ஆனால் இன்னும் சில உருதுமொழி பண்டிதர்கள் இது தவறு என்றும் அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார்கள். இந்த நிலையில் தனியார் தொலைகாட்சிக்கு ஷோயப் அக்தர் பேட்டி கொடுத்தார்.

வார்த்தை

வார்த்தை

அப்போது அவர் கூறிய வார்த்தைக்கு அவரிடமே அர்த்தம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நம் வேதாகமத்தில் காஜ்வா-இ-ஹிந்த் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அட்டாக்கில் உள்ள நதி ரத்தத்தால் இருமுறை சிவப்பாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் அட்டாக் என்ற இடம் வரை வரும். ஷாமால் மஷ்ரிக்கிலிருந்து படைகள் வந்த பிறகு உஸ்பெகிஸ்தானிலிருந்து படைகள் வரும். கோராசான் என்ற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இது லாகூர் வரை நீடிக்கும் பகுதியாகும். இந்தப் படைகள் பிறகு காஷ்மீரை பிடிக்கும். பிறகு முன்னேறி இந்தியாாவுக்குச் செல்வர். " என்று அவர்கள் புனித நூலில் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். இதை கேட்ட ஷோயப்பின் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில அரபு மொழி பண்டிதர்கள் ஷோயப்பின் விளக்கத்தை தவறு என கூறுகிறார்கள்.

English summary
Cricketer Shoaib Akhtar explains Ghazwa E Hind saying that they will first intrude Kashmir and capture India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X