• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது!

Google Oneindia Tamil News
  குரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை- வீடியோ

  ஸாக்ரெப்: குரோஷிய கால்பந்து அணியை விதம் விதமாக கொண்டாடி வருகிறது அந்த நாடு. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் ஒரு விசேஷ காரணம் உள்ளது என்றால் அதை மறுக்க முடியாது.

  குறிப்பாக குரோஷியாவை அதன் முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற ஹீரோ லூக்கா மோட்ரிக்கின் கதை பிரமிக்க வைப்பதாக உள்ளது. முடியாது, வராது, இயலாது என்று புலம்பும் சோம்பேறிகளுக்கு மிகப் பெரிய உத்வேகமாக முன்னுதாரணமாக, ஹீரோவாக உருவெடுத்து நிற்கிறார் லூக்கா.

  குரோஷிய அணியின் கேப்டன்தான் லூக்கா. இவரது தலைமையிலான கால்பந்து அணியின் சாதனை குரோஷிய கால்பந்து வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சரித்திரமாகியுள்ளது. லூக்காவின் கதை சாதாரணமானதல்ல. மிகப் பெரிய போராட்டம் அது.

  பிறந்த நாடு யூகோஸ்லேவியா

  பிறந்த நாடு யூகோஸ்லேவியா

  குரோஷியாவுக்காக ஆடி வரும் லூக்கா பிறந்த ஊர் மோட்ரிசி என்ற குக்கிராமம் ஆகும். இது அப்போது யூகோஸ்லேவியாவில் இருந்தது. யூகோஸ்லேவிய வரலாறு தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. போர்க்களத்தில் பூத்த சின்ன பூதான் லூக்காவும். இவரது பெற்றோருக்கு லூக்காதான் மூத்த பிள்ளை.

  குரோஷிய போரின் உக்கிரம்

  குரோஷியப் போர் 1991ல் உக்கிரமாக இருந்தது.அந்த சமயத்தில் இவருக்கு வயது 6 வயதுதான். போர் வெகு உக்கிரமாக இருந்ததால் இவரது குடும்பம் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி தப்பி ஓடியது. அவரது தந்தை குரோஷிய ராணுவத்தில் இணைந்தார். தாத்தா, பாட்டி ற்றும் குடும்பத்தினர் 6 பேரை குரோஷிய செர்பிய போராளிகள் பிடித்து சுட்டுக் கொன்றனர். ஜெஸ்னிஸ் என்ற ஊரில் இருந்த இவர்களது வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

  அகதி லூக்கா

  அகதி லூக்கா

  லூக்காவும் அவரது குடும்பத்தினர் பிறரும் அகதிகளாக மாறினர். 7 வருட காகலம் கோலவரே என்ற இடத்தில் ஒரு ஹோட்டலில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இஸ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்தனர். போகும் இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும்தான் இவர்களை வரவேற்றன. லூக்காவின் சிறு பிராயம் முழுவதும் வெடிச்சத்தத்திற்கு மத்தியில்தான் கழிந்தது.

  கால்பந்து மீது மோகம்

  கால்பந்து மீது மோகம்

  போரால் விரக்தியுற்றிருந்த லூக்காவை கால்பந்து விளையாட்டு கவர்ந்திழுத்தது. கடுமையான சூழலிலும் கூட கால்பந்து விளையாட ஆர்வம் காட்டினார் லூக்கா. தான் தங்கியிருந்த ஹோட்டல் கார் பார்க்கிங்தான் இவரது மைதானமாக இருந்தது. 1992ல் இவர் ஒரு தரமான வீரராக உருவெடுத்தார். பள்ளி நிர்வாகம் இவரது திறமையைப் பார்த்து பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டது.

  அகதி முகாம்களில் ஆட்டம்

  அகதி முகாம்களில் ஆட்டம்

  பல்வேறு ஊர்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் லூக்கா பங்கேற்று விளையாடினார். இவரை திறமையான வீரராக உருவாக்கிய பெருமை பயிற்சியாளர் டோமிஸ்லேவ் பேசிக் என்பவருக்குத்தான் போய்ச் சேரும்

  சொங்கியா இருக்கியேப்பா!

  சொங்கியா இருக்கியேப்பா!

  ஆனால் லூக்காவுக்கு அத்தனை சீக்கிரம் அங்கீகாரம் கிடைத்து விடவில்லை.அந்த ஊரில் அப்போது பிரபலமாக இருந்த ஹஜ்துக் ஸ்பிளிட் அணியில் இணைய முயற்சித்தார் லூக்கா. ஆனால் பார்க்க சோப்ளாங்கி மாதிரி இருக்கிறாய். சேர்க்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் வெகுண்ட லூக்கா, தேர்வாளர்களுக்கு முன்பு தனது வித்தைகளைக் காட்டி அவர்களை மிரட்டி விட்டார். அதன் பின்னர் பயிற்சியாளர் பேசிக், லூக்காவை டைனமோ ஜாக்ரெப் அணியில் சேர்த்து விட்டார்.

  2003ல் சூப்பர் ஸ்டார்

  2003ல் சூப்பர் ஸ்டார்

  2003ம் ஆண்டுதான் இவர் மிக முக்கியமான வீரராக உருவெடுத்தார். போஸ்னியா - ஹெர்ஸகோவினா பிரீமியர் லீக் தொடரில் இவரது திறமையைக் கண்டு எதிரணிகள் மிரண்டன. தற்போது குரோஷிய அணியின் சூப்பர்ஸ்டாராக உருவடுத்துள்ளார் லூக்கா. அத்தோடு நில்லாமல் குரோஷிய அணியை முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் ஒரு கேப்டனாக இட்டுச் சென்றுள்ளார்.

  அத்தனை பேருக்கும் ஆதர்ச ஹீரோவாக உருவெடுத்துள்ளார் லூக்கா.

  English summary
  Croatia are celebrating their WC hero Luka Modric, who has grown in Refugee camps during the Croatian war.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X