For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இறுதி போட்டியில் சர்ச்சையை கிளப்பிய புதின்...பாராட்டை பெற்ற குரோஷியா அதிபர்- வீடியோ

    மாஸ்கோ: என்னதான் பிரான்ஸ் உலக கோப்பை கால்பந்து தொடரை வென்றாலும், உலகமெங்கும் வாழும் ரசிகர்கள் இதயத்தை வென்றது என்னவோ குரோசிய பெண் அதிபர், கொலிண்டா கிராபர் கிடாரோவிக்தான்.

    குட்டி நாடான குரோசியா முதல் முறையாக கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அந்த நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.

    மக்களின் மகிழ்ச்சியை பங்குபோட்டு, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியை நேரில் காண கொலிண்டா கிராபர் கிடாரோவிக் வந்திருந்தார்.

    ரசித்து பார்த்த அதிபர்

    ரசித்து பார்த்த அதிபர்

    குரோஷிய நாட்டு வீரர்கள் அணியும் ஜெர்சியை கொலிண்டா கிராபர் கிடாரோவிக்வும் அணிந்திருந்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுடன், குரோஷிய அதிபரும் விஐபிகளுக்கான காலரியில் அமர்ந்து கால்பந்தாட்டத்தை ரசித்து பார்த்தார். தனது அணி கோல் அடித்தபடி அவர் முகத்தில் பார்க்கனுமே, அப்படி ஒரு உற்சாகம்.

    சோகம், மகிழ்ச்சி

    சோகம், மகிழ்ச்சி

    அதேநேரம், பிரான்ஸ் அணி கோல் அடித்தபோதெல்லாம் தலையில் கை வைத்து சோகத்தில் உட்கார்ந்துவிட்டார், கொலிண்டா கிராபர் கிடாரோவிக். இந்த புகைப்படங்கள் எல்லாமுமே இணையதளங்களில் வைரலாக சுற்றி வருகின்றன.

    கட்டியணைத்து வாழ்த்து

    குரோஷியாவை, பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பிறகு, அந்த நாட்டு ரசிகர்களும், வீரர்களும் மிகுந்த சோர்வடைந்தனர். அப்போது, கொலிண்டா கிராபர் கிடாரோவிக் கொட்டும் மழையில் கூட தனது நாட்டு வீரர்களை கட்டியணைத்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    மழையிலும் நனைந்தார்

    பரிசளிப்பு நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு குடை பிடிக்கப்பட்ட நிலையில் குடையின்றி, மழையில் நனைந்தபடியே, கொலிண்டா கிராபர் கிடாரோவிக், பங்கேற்றார். குரோஷியா இந்த அளவுக்கு பைனல் வரை வந்ததற்கு, அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக்கின் தொடர் சப்போர்ட் ஒரு காரணம். அவர் பல போட்டிகளில் நேரில் வந்திருந்து தனது வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டியபடியே இருந்தார்.

    English summary
    Croatian President Kolinda Grabar-Kitarovic became one of the most talked about world leaders as Croatia lost to France in an attacking football display.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X