For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட் துண்டுகளால் நிரம்பிய நெதர்லாண்ட்... சுத்தம் செய்ய காக்கைகளை பணிக்கு அமர்த்திய குழு!

நெதர்லாந்தில் சாலைகளில் அதிகமாக கிடக்கும் சிகரெட் துண்டுகளை அகற்ற காக்கைகளை பணிக்கு அமர்த்தி இருக்கிறது ஒரு குழு.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நெதர்லாந்து: நெதர்லாந்தில் வருடாவருடம் அதிக அளவில் சாலைகளில் சிகரெட் துண்டுகளை குப்பைகளாக போடப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு பொது இடங்கள் சிகரெட் குப்பைகளால் நிரம்பி வழிகிறன்றன.

வருடாவருடம் அங்கு இந்த சிகரெட் குப்பைகளை அகற்றுவது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது. இதையடுத்து அந்த சாலைகளில் அதிகமாக கிடக்கும் சிகரெட் குப்பைகளை அகற்ற காக்கைகளை பணிக்கு அமர்த்தி இருக்கிறது ஒரு குழு.

இந்த பணியை செய்யும் காக்கைகளுக்கு சம்பளமாக ஒவ்வொரு சிகரெட் குப்பைக்கும் சிறிய அளவு உணவு தரப்படுகிறது. காக்கைகள் மிகவும் புத்திசாலியான உயிரினம் என்பதால் இந்த வேலைக்கு அவைகள் அமர்த்தப்பட்டுள்ளன.

 சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து

சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து

நெதர்லாந்தில் வருடத்திற்கு வருடம் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. மேலும் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆவதால் அங்கே குப்பையாக வீசப்படும் குடிக்கப்பட்ட சிகரெட் துண்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு வருடத்திற்கு 6 பில்லியன் சிகரெட் துண்டுகள் சாலையில் வீசப்படுவதாக கூறப்படுகிறது. இந்த துண்டுகளை சுத்தப்படுத்த முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகின்றது. மேலும் இந்த துண்டுகள் மட்குவதற்கு சராசரியாக 12 ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது.

 காக்கைகளின் க்ரோடெட் சிட்டி அமைப்பு

காக்கைகளின் க்ரோடெட் சிட்டி அமைப்பு

இந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண காக்கைகளை துணைக்கு அழைக்க முடிவு செய்தது 'க்ரோடெட் சிட்டி' என்ற அமைப்பு. ரூபன் வான் டெர் மற்றும் பாப் ஸஃபிக்மென் என்ற இரண்டு பேரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நெதர்லாந்தில் அமைதியாக ஒரு புரட்சியே செய்து கொண்டு இருக்கின்றது. அதாவது சாலையில் கிடக்கும் சிகரெட் குப்பைகளை அகற்ற இந்த அமைப்பு காக்கைகளை பயன்படுத்துகின்றது. உலகிலேயே காக்கைகள் மிகவும் புத்திசாலியான உயிரினங்கள் என்பதால் அவைகளை இந்த பணிக்கு அமர்த்தியுள்ளதாக இந்த அமைப்பு கூறுகிறது.

 எப்படி குப்பைகள் சுத்தம் செய்யப்படுகின்றன

எப்படி குப்பைகள் சுத்தம் செய்யப்படுகின்றன

முதலில் நெதர்லாந்தில் இருக்கும் குறிப்பிட்ட சில காக்கைகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் சிகரெட் துண்டுகளை சரியாக கண்டறிந்து அதை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் சரியாக போடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது சரியாய் வேலை செய்ததை அடுத்து நிறைய காக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காக்கைகள் அனைத்தும் சரியாக சிகரெட் குப்பைகளை தொட்டியில் வந்து போடுகின்றது. மேலும் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்காக இணையதள பக்கம் ஒன்று கூட உருவாக்கப்பட்டுள்ளது.

 காக்கைகளுக்கு சம்பளமாக உணவு

காக்கைகளுக்கு சம்பளமாக உணவு

இந்த நிலையில் சிகரெட் குப்பைகளை சரியாக கொண்டு வந்து போடும் காக்கைகளுக்கு சம்பளமாக உணவு வழங்கப்படுகிறது. இந்த சிகரெட் குப்பைகளை காக்கைகள் அதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் மட்டுமே போட வேண்டும். அப்போது அந்த பெட்டியில் இருக்கும் சென்சார் அதை சரியாக சோதனை செய்து உண்மையாகவே அது சிகரெட் துண்டா என்பதை சோதிக்கும். உண்மையாக சிகரெட் துண்டாக இருந்தால் அதற்கு சம்பளமாக சிறிதளவு உணவை அது வெளியே அனுப்பும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக அங்கு செயல்பட்டு வருகின்றது. சிலர் காக்கைகளை சிறிய அளவிலான காயின்களை தூக்குவதற்கு பழக்கப்படுத்தியதை பார்த்தே இந்த யோசனை வந்ததாக அந்த குழு கூறுகின்றது.

English summary
A group called Crowded Cities uses crows to clean Netharland. It uses crows to clean the used buds of the cigarette. They provide food as the salary for this crows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X