For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரு, பாரு, நல்லா பாரு துபாயில் நடக்கும் சர்வதேச படகு கண்காட்சியை நல்லா பாரு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் சர்வதேச படகு கண்காட்சியை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது துவங்கி வைத்தார்.

Crown Prince kickstarts Dubai International Boat show

துபாய் சர்வதேச படகு கண்காட்சி துபாயில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 24வது படகு கண்காட்சி துபாயில் உள்ள சர்வதேச மரைன் கிளப்பான மினா செயாஹியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

கண்காட்சியை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது துவங்கி வைத்தார். 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் 39 படகுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கண்காட்சியில் அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 450 படகுகள் வைக்கப்பட்டுள்ளன.

இளவரசர் கண்காட்சியை துவக்கி வைத்து படகுகளில் சிலவற்றை சுற்றிப் பார்த்தார். 55 நாடுகளைச் சேர்ந்த 800 நிறுவனங்களின் படகுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை காண 120 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் துபாய் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் பணக்காரர்கள் சொகுசு படகுகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படகுகள் வாங்க பணக்காரர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் வேளையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sheikh Hamdan bin Mohammed, Crown Prince of Dubai has kickstarted the 24th Dubai International Boat Show on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X