For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-வீடியோ

    ரியாத்: சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    சவுதி அரேபியாவில் அப்குவைக் என்ற நகரத்தில் கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இதை சுருக்கமாக ஆரம்கோ என்பார்கள். இதுதான் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும்.

    இங்கு பயங்கர வெடிசப்தத்துடன் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 14-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது. இங்கு 12 முறை குண்டுகள் வெடிக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

    ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்

    வெளியேற்றம்

    வெளியேற்றம்

    இதனால் நிறுவனத்தை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த பயங்கர தீவிபத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த தீவிபத்தை ஆளில்லா விமானம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    எண்ணெய் வயல்

    எண்ணெய் வயல்

    ஆலைக்கு தீ வைத்த விமானம் குறித்தும் தீயை வைக்க வைத்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ரியாத்திலிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள குரைஸ் எண்ணெய் வயலிலும் தீவிபத்து ஏற்படுத்தப்பட்டது.

    கச்சா எண்ணெய் உற்பத்தி

    கச்சா எண்ணெய் உற்பத்தி

    இந்த நிலையில் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் நிர்ணயிக்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலை 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போருக்கு பிறகு மிப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

    10 சதவீத கச்சா எண்ணெய்

    10 சதவீத கச்சா எண்ணெய்

    சவுதி அரேபியாவின் குரைஸ் எண்ணெய் ஆலையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கினர். இதனால் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்துவிட்டது. 10 சதவீத கச்சா எண்ணெய்யை சவுதி வழங்கி வருகிறது.

    English summary
    Crude Oil's price goes very high in one dy after drone attack in Aramco company, Saudi Arabia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X