For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2600 வருடங்கள் பழமையான “குழந்தை” மம்மி – எகிப்தில் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் கிட்டத்தட்ட 2600 வருடங்கள் பழமையான குழந்தை மம்மி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

மம்மிக்கள் என்றாலே நமக்கு எகிப்தின் ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு பிரமிடுகளும், மம்மிகளும் அங்கு அதிகம்.

அந்த வகையில் அங்கு கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட "குழந்தை மம்மி" ஒன்று போலியானதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினர்.

போலி என சந்தேகம்:

போலி என சந்தேகம்:

அதற்கு காரணம் அந்த மம்மியை சுற்றி போர்த்தி வைக்கப்பட்டிருந்த எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் தான். இந்த குழப்பம் காரணமாகவே 2600 ஆண்டு பழமை வாய்ந்ததும், 52 செ.மீ நீளம் கொண்ட அந்த "குழந்தை மம்மி" போலி என கருதப்பட்டது.

குழந்தை மம்மி:

குழந்தை மம்மி:

ஆனால் வல்லுனர்கள் அந்த மம்மியை தற்போது சி.டி.ஸ்கேன் செய்து பார்த்ததில் அது உண்மையானது தான் என கண்டுபிடித்தனர். இதன் மூலம் பழங்கால எகிப்தியர்கள் பிறக்காத குழந்தைகளை கூட மம்மிகளாக்கியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

கருவில் இறந்தாலும் மரியாதை:

கருவில் இறந்தாலும் மரியாதை:

எகிப்தை சேர்ந்த வல்லுனரான கரோலின் கிரேவ்ஸ்-பெரௌன் இது குறித்து கூறுகையில், "பழங்காலங்களில் பெருமளவிலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போனாலும், கருவிலேயே சிதைந்து போனாலும் அதை சாதாரணமாக பார்க்காமல் அவைகளை பாதுகாப்புடன் புதைத்து வைத்துள்ளனர் என்பதை தான் இந்த மம்மி குழந்தை நமக்கு புரிய வைத்துள்ளது" என்றார்.

குழப்பம் தீர்ந்தது:

குழப்பம் தீர்ந்தது:

எகிப்தில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழக மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மம்மி குழந்தை தொடர்பாக கடந்த நூறு ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பம் தற்போது தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Boffins have solved the mystery of a “fake” Egyptian mummy - after putting it through a hospital scanner.Archaeologists were baffled by the mummified baby and thought it was a forgery because it was covered in “meaningless” hieroglyphics.But experts carried out a CT scan on the 52cm-long mummy and found it was the real thing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X