For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ஸில் 'டிராபிக் சிக்னல்': போட்டோ அனுப்பிய கியூரியாசிட்டி

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பந்து போன்ற உருவம் கொண்ட பொருள் கிடப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தை கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 தேதி விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்தது.

அதில் இருந்து கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.

இரும்பு விண்கற்கள்

இரும்பு விண்கற்கள்

செவ்வாய் கிரகத்தில் அதிக அளவில் இரும்பு விண்கற்கள் இருப்பதை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தது.

அணில்

அணில்

செவ்வாய் கிரகத்தில் அணில் போன்ற பாறை இருப்பதையும் கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்தது.

ஆள்

ஆள்

ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்தில் ஒருவர் முழங்காலில் கை வைத்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அனுப்பியது கியூரியாசிட்டி.

சிக்னல் லைட்

சிக்னல் லைட்

போக்குவரத்து சிக்னலில் இருக்கும் மூன்று வர்ண விளக்கு போன்ற உருவம் உள்ள பாறையை புகைப்படம் எடுத்தது கியூரியாசிட்டி.

பந்து

பந்து

செவ்வாய் கிரகத்தில் பந்து கிடப்பதை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அதை பார்த்தால் அழுக்கு படிந்த கோல்ப் பந்து போன்று தெரிகிறது. ஆனால் உண்மையில் அது பந்து வடிவிலான பாறை ஆகும்.

English summary
NASA's Curiosity has found a ball on the surface of Mars. The ball is nothing but a round Mars rock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X