For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச நீதிமன்ற, நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெனிவா: சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என் ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதிகளை கொண்ட இந்த நீதிமன்றத்தில் கடைசி ஒரு இடத்துக்கு ஏற்கனவே நீதிபதியாக உள்ள இந்தியரான தல்வீர் பண்டாரி (70) மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட் (62) போட்டியிட்டனர்.

 Dalveer Bhandari of India is elected as a member of the International Court of Justice

இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த 2 வாரங்களாக 2 சுற்று தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு பெரும்பான்மை கிடைத்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட் 9 ஓட்டுகள் பெற்றார். பண்டாரி 5 ஓட்டுகளை பெற்றார். சர்வதேச நீதிமன்ற சட்டதிட்டப்படி ஐ.நா. பொதுச்சபையிலும், பாதுகாப்பு சபையிலும் பெரும்பான்மை பெறுகிறவர்தான் நீதிபதி பணி இடத்துக்கு தேர்வு பெற முடியும்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் நேற்று கூடியது. நீதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரீன் உட், நீதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை ஐ.நா. பொதுச்சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் பிரேந்தன் வர்மா தெரிவித்துள்ளார்.

இவரது பதவிக்காலம் 2027 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் கிரீன் உட் போட்டியிலிருந்து விலக இந்தியா எடுத்த ராஜாங்கரீதியிலான நடவடிக்கை காரணம் என்று தூர்தர்ஷன் குறிப்பிட்டுள்ளது.

English summary
Dalveer Bhandari of India is elected by UNGA and the Security Council as a member of the International Court of Justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X