For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்யா: சோலை நகரில் படேல் அணை சுவர்கள் வெடித்து சுனாமியாக பாய்ந்த வெள்ளம்- 41 பேர் பலி

கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்து தண்ணீர் வெளியேறிய காரணத்தால் மொத்தம் 41 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஊருக்குள் வந்த தண்ணீர்.. கென்யாவில் 41 பேர் பலி-வீடியோ

    நைரோபி: கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்து தண்ணீர் வெளியேறிய காரணத்தால் மொத்தம் 41 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ளது சோலை என்ற கிராமம். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இந்த ஏழ்மையான கிராமத்தில், இரண்டுக்கும் அதிகமான தனியார் அணைகள் இருக்கிறது. அதில் மிகப்பெரிய அணையான பட்டேல் அணையில்தான் நேற்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.

    Dam bursts in Kenya, Kills 41 people, 2000 people missing

    இந்த அணை உடைந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் வந்துள்ளது. மொத்தமாக வழியில் இருந்த எல்லா விவசாய நிலங்களையும் இந்த வெள்ளம் நாசம் செய்துள்ளது. அதேபோல் இவ்வளவு நாள் அந்த மக்கள் கஷ்டப்பட்டு உருவாக்கி இருந்த சிறு சிறு வளர்ச்சி பணிகளையும் வெள்ளம் நாசம் செய்துள்ளது.

    இந்த வெள்ளத்தின் காரணமாக மொத்தம் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2000 பேர் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். 100 க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.

    இதில் இன்னும் பலர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அங்கு மீட்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரியாக எத்தனை பேர் மரணம் அடைந்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

    English summary
    Atleast 41 people have died in flood in Kenya due the burst in Patel Dam. More than 2000 people have gone missed in this incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X