For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமானுஷ்யங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணத்தில் ஆபத்தான தீவு!!

பெர்முடா முக்கோணத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தீவு ஒன்று உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பஹாமாஸ்: பஹாமாஸ் நாட்டில் உள்ள பெர்முடா முக்கோணத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் திடீர் தீவு ஒன்று உருவாகியுள்ளது.

பெர்முடா முக்கோணம், சாத்தான் முக்கோணம் என்றழைக்கப்படுகிறது. இது பஹாமாஸில் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி கடல் பகுதி போன்றதாகும்.

அவ்வழியாக செல்லும் நிறைய விமானங்களும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பீதி ஏற்படுத்தும் விஷயங்களுக்கு அமானுஷ்ய சக்தி அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

முக்கோண பகுதி

முக்கோண பகுதி

பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இந்த பெர்முடா முக்கோணம். உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன.

திடீர் தீவு

திடீர் தீவு

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சமீபத்தில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சிறிய மணல் திட்டு போன்று இருந்தது. அது போக போக பிறை வடிவ தீவாக காட்சி அளிக்கின்றன.

ஷெல்லி என பெயர்

ஷெல்லி என பெயர்

இந்த தீவில் ஏராளமான சங்குகள் உள்ளதால் இதற்கு ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்ட தீவாகும். இங்கு சங்கு மற்றும் புகைப்படம் எடுக்க செல்வோர் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். அத்தனை ஆபத்து நிறைந்த பகுதியாகும்.

திமிங்கலமும் உண்டு

திமிங்கலமும் உண்டு

இந்த முக்கோணத்தில் பெரிய அளவிலான திமிங்கலங்கள் ஏராளமாக உள்ளதால் உள்ளூர் மக்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ஆபத்துகள் நிறைந்த நிலையில் இந்த பெர்முடா முக்கோணம் உள்ளது. இதில் திடீர் தீவு வேறு உருவாகியுள்ளதால் ஆபத்துகள் இன்னும் ஏராளம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை

மக்களுக்கு எச்சரிக்கை

மிகவும் வலிமையான நீரோட்டங்கள் முக்கிய பகுதியை மணல் திட்டு பகுதியிலிருந்து பிரிப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டுக்கும் இடையே உள்ள 50 கஜங்கள் (யார்டுகள்) ஆகும்.

English summary
A new island named Shelly island has formed in the Bermuda Triangle, so people are being told to stay away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X