For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிக கொடூரமாக கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளர்.. குற்றவாளிகளை விடுவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கச் செய்தியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட அகமது உமர் சயீத் ஷேக் என்பவரைப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்தவர் டேனியல் பெர்ல். தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் தெற்கு ஆசியப் பிரிவில் பணியாற்றிய இவர் மும்பையிலிருந்து பணிபுரிந்து வந்தார்.

செய்தி சேகரிப்பதற்காகக் கடந்த 2002ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது இவர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மரண தண்டனை

மரண தண்டனை

இது தொடர்பாக அகமது உமர் சயீத் ஷேக் உள்ளிட்ட மூன்று பேரைப் பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பயங்கரவாத சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், மூவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

மரண தண்டனை

மரண தண்டனை

இது தொடர்பாக அகமது உமர் சயீத் ஷேக் உள்ளிட்ட மூன்று பேரைப் பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பயங்கரவாத சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், மூவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்

விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் அகமது உமர் சயீத் ஷேக்கின் மரண தண்டனை, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துச் சிந்து மாகாணம் சார்பிலும் டேனியல் பெர்ல் குடும்பத்தினரும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கக்கோரி அதிர்ச்சி தீர்பைப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகமது உமர் சயீத் ஷேக்

அகமது உமர் சயீத் ஷேக்

வெளிநாட்டவர்களைக் கடத்தியது தொடர்பான வழக்கில் அகமது உமர் சயீத் ஷேக் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், விடுதலை செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர்தான் அகமது உமர் சயீத் ஷேக்.

டேனியல் பெர்ல்

டேனியல் பெர்ல்

தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் செய்தியாளராக இருந்தவர் டேனியல் பெர்ல். அமெரிக்காவில் ஷூ வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடிக்க வைக்க முயன்ற ரிச்சர்ட் ரீட் என்பவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து செய்தியைச் சேகரிக்கப் பாகிஸ்தான் சென்றபோது கடத்தப்பட்டார். அதன் பின் சில நாட்களுக்குப் பின், பாகிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் டேனியல் பெர்ல் தலை வெட்டப்படும் வீடியோ அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

English summary
Pakistan’s supreme court has ordered the release of a Pakistani man convicted and later acquitted of the beheading of the American journalist Daniel Pearl in 2002.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X