For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்வாண படத்தை நெட்டில் போடுவேன்: இந்திய அமெரிக்க கோடீஸ்வரர் மகளை மிரட்டிய மாஜி காதலன்

By Siva
Google Oneindia Tamil News

Daughter of Indian-American billionaire allegedly blackmailed over nude pictures
வாஷிங்டன்: இந்திய அமெரிக்க தொழில் அதிபரான வினோத் கோஸ்லாவின் மகளிடம் நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.

இந்திய அமெரிக்கரான வினோத் கோஸ்லா(59) பெரும் பணக்காரர் ஆவார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான அவரின் மகள் நீனா கோஸ்லா(26). அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற டக்ளஸ் டார்லோ(27) என்பவரை 2007ம் ஆண்டு சந்தித்து காதலில் விழுந்துள்ளார். பின்னர் அவர்கள் 2010ம் ஆண்டு இறுதியில் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் டார்லோ நீனாவுடன் பழகிய காலத்தில் அவரை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நீனாவின் நிர்வாண படங்களை அவரது தாய் நீருவுக்கு அனுப்பி வைத்து இதை இணையதளத்தில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ரூ.43 லட்சத்து 72 ஆயிரத்து 290 பணத்தை கோஸ்லா பவுன்டேஷன் தர வேண்டும் என்று கூறி அதை கேட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்லோவை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.

English summary
A former boyfriend of Indian-American billionaire investor Vinod Khosla's daughter has been charged with threatening to publish her naked photos as part of an extortion plot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X