For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். குண்டுவெடிப்பில் 15 பேர் பலி; நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அரசு பேருந்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பலியாகினர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் ஆவர்.

வடமேற்கு பாகிஸ்தானில் அரசு ஊழியர்களை குறிவைத்து பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த தினமான நேற்று அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தலைமைச் செயலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 50 அரசு ஊழியர்கள் பயணம் செய்தனர். பிரதான சாலையில் பேருந்து சென்ற போது திடீரென பேருந்து டமால் என்ற சத்தத்துடன் வெடித்தது.

Deadly bomb blast hits bus in Pakistan

இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 15 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்த 15 பேருந்து தலைமைச் செயலக ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் பெஷாவர் மாகாணத்தில் போலீசார் மீது குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர் 17 பேர் படுகாயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பெஷாவர் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப், பஸ்சின் உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து, வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த போது பஸ்சில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

பேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல்

நைஜீரியாவில் இன்று மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவில் பாதுகாப்பு படைக்கு கடும் சவாலாக விளங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், மைதுகுரி நகரை அடிக்கடி குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் இன்று காலை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே புகுந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில், பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர்.

பலர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏராளமானோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர். நிலையில், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். அப்போது மற்றொரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

English summary
Explosion rocks bus carrying government officials in restive northwestern city of Peshawar, also wounds more than 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X