For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி, 107 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலையில் நேர்ந்த பயங்கர தீ விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிஸான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் முதல்தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குநர் கூறினார்.

தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

ரியாத் தமிழ் சங்கம்

இதனிடையே ரியாத் தமிழ் சங்கத்தின் சமூக சேவை பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிஸான் என்ற இந்தப்பகுதி தலைநகர் ரியாத்தில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஜிஸான் அரசு மருத்துவமனையின் முதல் தளத்தில் தீ பிடித்ததாகவும் அதில் 25 பேர் இறந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இங்குள்ள பத்திரிக்கைகள் அறிவிக்கின்றது.

தீவிரசிகிச்சைப் பிரிவில் தீ பிடிக்க ஆரம்பித்து அது மகப்பேறு பிரிவிலும் பற்றி எரிந்துள்ளது,

தீவிபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை, 21 தீயணைப்பு வீரர்களின் குழுக்கள் இந்த தீயை அனைத்ததாக தெரிவித்துள்ளார்கள் அதற்கான விசாரனை நடைபெறுகின்றது என்று தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மற்றும் பொதுமருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிரசிகிச்சை நடப்பதாக அறிவித்துள்ளார்கள், இறந்தோர்களின் விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

English summary
At least 25 killed and more than 100 injured in blaze in Jizan, which began on floor housing ICU and maternity ward.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X