For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காது கேளாதவர்கள் இணைந்து நடத்தும் டாக்சி நிறுவனம்.. தென் கொரியாவில் ஹிட்!

தென் கொரியாவில், காது கேளாத ஓட்டுநர்கள் இணைந்து வாடகை கார் சேவையை முதல் முதலாக ஆரம்பித்துள்ளனர்.

By Rajeswari
Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியா, சியோல்லில் காது கேளாத ஓட்டுநர்கள் இணைந்து வாடகை கார் சேவையை முதல் முதலாக ஆரம்பித்துள்ளனர்.

காது கேட்க இயலாத ஓட்டுனர்களை வேலைக்கு வைக்க பயப்படும், உள்ளூர் மக்களுக்கு இருக்கும் தயக்கத்தை குறைப்பதற்கு இதை செய்துள்ளனர். புதிய மென்பொருள் கருவி ஒன்று இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.

தனியார் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் கருவியின் மூலம் இந்த காது கேளாத ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர். இதை வைத்து அவர்கள் இயல்பாக வாகனம் ஓட்டுகிறார்கள்.

மென்பொருள் செயல்பாடு

மென்பொருள் செயல்பாடு

இந்த மென்பொருள் கருவி எப்படி செயல்படுகிறது என்பதை அவர்களே விளக்கி உள்ளனர். வாடகை காரின் முன்னும் பின்னும் இரண்டு கணினிகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு கணினிகள், 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் பேசும் வார்த்தைகளை எழுத்து வடிவில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் எங்கு செல்ல வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்று சொல்வதை இது மொழி பெயர்க்கும்.

இந்த மென்பொருள் கருவி எப்படி செயல்படுகிறது என்பதை அவர்களே விளக்கி உள்ளனர். வாடகை காரின் முன்னும் பின்னும் இரண்டு கணினிகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு கணினிகள், 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் பேசும் வார்த்தைகளை எழுத்து வடிவில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் எங்கு செல்ல வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்று சொல்வதை இது மொழி பெயர்க்கும்.

மென்பொருள் கண்டுபிடிப்பு

மென்பொருள் கண்டுபிடிப்பு

கணினி பொறியாளர் பட்டம் பெற்றுள்ள சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. காது கேளாதவர்களின் நலன் கருதி அவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர விரும்பியதாக சொங், கூறியுள்ளார்.

அகன்று விடுவார்கள்

அகன்று விடுவார்கள்

காது கேளாதவர்கள் தங்கள் பயணிகளின் தகவல்களை தங்களிடம் இருக்கும் நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த நேரத்திலே பொறுமை இழந்து பயணிகள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள், அதனால்தான் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்ததாக அவர் கூறியுள்ளார். இது இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

கார் நிறுவனம் உபேர்

கார் நிறுவனம் உபேர்

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் நிறுவனம் எடுத்த முயற்சியால் இந்த செயலை செய்ததாக சொங் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் காது கேளாத நிறைய பேர் வாடகை கார் ஓட்டும் தொழிலை செய்ய ஆரம்பிப்பார்கள் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.

பயனடைவார்கள்

பயனடைவார்கள்

தென் கொரியாவில் ஏன் இந்த முயற்சியை எடுத்தார்கள் என்று பலருக்கும் ஏற்பட்ட அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், அந்த நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் இந்த வசதியால் நிறைய காது கோளாதோர் வாழ்க்கை பயனடையும் என்றுள்ளார்.

English summary
In South Korea, deaf drivers have started a rental car service first and foremost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X