For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோகத்தில் முடிந்த ”ஹோலி” - பாகிஸ்தானில் கள்ளச் சாராயம் குடித்த 45 பேர் பலி

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி மது அருந்திய 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ஹைதராபாத் நகரம் அமைந்துள்ள டண்டோ முகமது கான் மாவட்டத்தில், ஹோலி பண்டிகையையொட்டி கடந்த திங்கட்கிழமை இரவு போலி மதுபானம் அருந்திய சுமார் 120 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பெண்கள் உட்பட 24 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

Death toll reaches 45 in Pakistan liquor tragedy

இந்நிலையில், போலி மதுபான பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்களில் 10 பெண்கள் உள்பட 35 பேர் இந்துக்கள் என தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை ஐம்பதை கடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை மற்றும் வழக்கு அலைச்சலுக்கு பயந்து பலர் தங்கள் உறவினர்களின் இறப்பை பற்றி யாருக்கும் தெரிவிக்காமல், பிணங்களை ரகசியமாக புதைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
The death toll from the spurious liquor tragedy in Pakistan's southern Sindh province during Holi celebrations has reached 45 including 35 Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X