For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகரித்து வரும் மரணங்கள்.. பீதியில் "பூலோக சொர்க்கம்" சுவிட்சர்லாந்து

Google Oneindia Tamil News

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு ஆண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சுற்றுலா தளங்களுக்குப் பேர் போன நாடு சுவிட்சர்லாந்து. பூலோக சொர்க்கம் என்றும் இதை செல்லமாக அழைப்பார்கள்.

இங்கு கடந்தாண்டு மட்டும் சுமார் 67,300 பேர் உயிரிழந்துள்ளனராம். கடந்த 2014ம் ஆண்டு 63,900 பேர் உயிரிழந்ததாக ஸ்விஸ் பெடரல் ஸ்டேடிஸ்டிகல் அலுவலகம் கூறுகின்றது.

100 ஆண்டுகளில்...

100 ஆண்டுகளில்...

அதிலும், கடந்த 100 ஆண்டுகளில் கடந்தாண்டு தான் அதிகளவு இறப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. நோய்த்தொற்றே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வயதானவர்களே அதிகம்...

வயதானவர்களே அதிகம்...

அதிலும், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த ப்ளூ தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

பெண்கள்...

பெண்கள்...

இறந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்கள். அதாவது பெண்கள் 5.6 சதவீதமும், ஆண்கள் 4.7 சதவீதமும் உயிரிழப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள்...

ஐரோப்பிய நாடுகள்...

இதே நிலை பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுவதாக எப்.எஸ்.ஓ. கூறுகின்றது.

பிறப்பு விகிதம் குறைவு...

பிறப்பு விகிதம் குறைவு...

இறப்பு விகிதம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் பிறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்து வருகிறாதாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 85,200 ஆக இருந்த பிறப்பு கணக்கு, கடந்தாண்டு 84,800 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 67,300 people passed away in Switzerland last year, up from 63,900 in 2014, the Swiss Federal Statistical Office (FSO) reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X