For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கமலா".. அவ்வளவுதானே.. அப்படித்தானே கூப்பிடணும்.. இதுல ஏன் இனவெறி.. அதையும் தாண்டி "தாமரை" மலருமா?

கமலா பெயரை ஜனநாயக கட்சியினர் தவறாக உச்சரிப்பதாக புகார் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சிகாகோ: ஹிந்திக்காரர்களுக்கு தமிழ்நாட்டுக்காரர்களின் பெயரை உச்சரிக்க வராது என்று பொதுவான குற்றச்சாட்டு இங்கு உண்டு.. பெயரை போட்டு குதப்பி சொதப்பி எடுத்து விடுவார்கள்.. அதே போலத்தான் ஒரு பிரச்சினை இப்போது அமெரிக்காவில் வெடித்துள்ளது. ஆனால் இதில் இனவெறி கலந்திருப்பதாக பகீர் புகாரை அடுக்கி வருகின்றனர் ஜனநாயகக் கட்சியினர்.

Recommended Video

    KAMALA HARRIS இப்படி பட்டவங்களா ! | UNTOLD STORY | ONEINDIA TAMIL

    வெளிநாட்டுக்காரர்களுக்கு நம்ம ஊர்க்காரர்கள் எல்லாருமே கருப்பர்கள்தான். வட இந்தியர், தென்னிந்தியர் என்றெல்லாம் அவர்களுக்குப் பிரிவினை கிடையாது.

    பொதுவாக அவர்கள் பார்வையில் இந்தியர்னாலே கருப்பர்கள்தான்... அப்படிப்பட்டவர்கள் நமது பெயர்களையும் கூட தாறுமாறாகத்தான் உச்சரிப்பார்கள்.. மாறியும் சிதறியும் போய் கிடக்கும் நம்ம ஊர் பெயர்களே அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

    கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் சென்னை மீண்டு வரும் - முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் சென்னை மீண்டு வரும் - முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து

    இனவெறி

    இனவெறி

    இப்போது அமெரிக்காவில் ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். அதாவது ஜனநாயகக் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் பெயரை வேண்டும் என்றே இனவெறியுடன் தப்புத் தப்பாக உச்சரிப்பதாக ஒரு புகாரை ஜனநாயக்க கட்சியினர் கிளப்பி வருகின்றனர். குறிப்பாக அதிபர் டிரம்ப்பும், துணை அதிபர் மைக் பென்ஸும் வேண்டும் என்றே இனவெறியுடன் கமலாவின் பெயரை தப்பு தப்பாக உச்சரிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

     ஜனநாயக கட்சி

    ஜனநாயக கட்சி

    கமலா தனது பெயரை KAH'-mah-lah அல்லது comma-la என்று உச்சரிக்கலாம் என்று ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் அப்படி சொல்லாமல் அவரவர் இஷ்டத்திற்கு உச்சரித்து குடியரசு கட்சியினர் இனவெறியை வெளிப்படுத்துவதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனராம். அவரது பெயரை "கம்மாலா" என்று தப்புத் தப்பாக வேண்டும் என்றே உச்சரிப்பதாகவும் சொல்லி வருத்தப்படுகின்றனர்.

     உச்சரிப்பு

    உச்சரிப்பு

    டிரம்ப்பை போலவே குடியரசுக் கட்சியின் தேசிய குழு தலைவர் ரோனா மெக்டேணியலும் கமலாவின் பெயரை தப்பாக உச்சரித்தே பேசுகிறாராம். இது வேண்டும் என்றே இனவெறியை காட்டுவதாக குற்றம் சாட்டுகிறது ஜனநாயக கட்சி. கமலாவின் அப்பா ஜமைக்காவை சேர்ந்தவர். அம்மா தமிழ்நாட்டுக்காரர். கமலாவின் முழு பெயர் கமலா தேவி ஆகும். ஆனால் அவர் தனது கணவர் ஹாரிஸை இணைத்து "கமலா ஹாரிஸ்" என்றே அறியப்படுகிறார்.

    காமலா

    காமலா

    தற்போது கமலாவின் பெயரை அமெரிக்கர்கள் "காம.. லா" என்றும் செல்லமாக சொல்லி வருகின்றனர். காமலா என்ற முழக்கம்தான் ஜனநாயக கட்சியினரின் பிரசார கூட்டங்களில் சத்தமாக ஒலிக்கிறது. தனது பெயருக்கான அர்த்தத்தையும் பலமுறை கமலா விளக்கியுள்ளதுடன், இதுதொடர்பாக ஒரு கட்டுரையில் எழுதுகையில், "எனது பெயருக்கு அர்த்தம் தாமரை மலர். இது இந்தியாவில் மிகவும் முக்கியமானது. இந்திய கலாச்சாரத்துடன் இணைந்தது" என்று விளக்கியும் உள்ளார் கமலா.

     தாமரை மலருமா?

    தாமரை மலருமா?

    அதை விட கொடுமை டிரம்ப்பின் பெர்சனல் வழக்கறிஞரான ரூடி கியூலானி, கமலாவின் பெயரை, பமீலா ஹாரிஸ் என்று அழைத்து சர்ச்சையில் சிக்கினார். ஆக மொத்தம் இனவெறி பிரச்சினையும் சேர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது. இத்தனை சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி தாமரை மலருமா... அதாவது கமலா வெல்வாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்!!

    English summary
    Decmocratic party leaders see racism in pronouncing the name of kamala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X