• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோவில் நடந்த மறக்க முடியாத மாற்றங்கள்.. சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் பேசியது என்ன?

|

மாஸ்கோ: கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனாவுக்கு இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் ஆகியோர் முதல்முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  China அமைச்சருடன் Rajnath Singh என்ன பேசினார்? | India China Border Issue | Oneindia Tamil

  கடந்த மே மாதத்தில் இருந்து சீனா இந்தியா இடையே லடாக் எல்லையில் மோதல் நடந்து வருகிறது. ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் விவரங்கள் வெளியாகவில்லை.

  இந்த சம்பவததிற்கு பின்னர் லடாக் எல்லையில் எல்லையில் சில இடங்களை படைகளை வாபஸ் வாங்கிய சீனா, குறீப்பிட்ட சில பகுதிகளில் படைகளை வாபஸ் வாங்க மறுத்துவிட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே ராணுவ அளவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் படைகளை விலக்க சீனா மறுத்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் சீனா இந்தியாவின் பாங்காங் ஏரி தெற்கு கரை பகுதிகளில் மீண்டும் ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்று தோற்றது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் நீடிக்கிறது.

  மாஸ்கோவில் மாஸ் காட்டிய ராஜ்நாத் சிங்.. சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில்! செம்ம பேச்சு!

  சீனா வேண்டுகோள்

  சீனா வேண்டுகோள்

  இந்த சூழலில் தான் முதல்முறையாக மே மாதம் மோதல் துவங்கிய பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார்கள். இந்த சந்திப்பின்போது, இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேச வர்மாவும் உடனிருந்தனர். சீன பாதுாப்புத்துறையின் வேண்டுகோளின்படியே இந்த சந்திப்பு நடந்தது.

  அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

  அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

  இந்த கூட்டத்தில் என்னென்ன பேசினார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லை விவகாரத்தில், இரு தரப்பும் முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டபடி அவரவர் நிலைகளிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையை உண்மையான ஈடுபட்டுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  ஆக்கிரமிப்பு கூடாது

  ஆக்கிரமிப்பு கூடாது

  முன்னதாக நேற்று நடைபெற்ற எஸ்சிஓ ராணுவ அமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்பட நம்பிக்கை தேவை என்றும். ஆக்கிரமிப்பு இல்லாத நிலையும், அமைதியாக வேறுபாடுகளைத் தீர்ப்பது அவசியம் என்றும் நாடுகள் சர்வதேச விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சீன பாதுகாப்பு மந்திரி முன்னிலையில் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துக்கள் கிழக்கு லடாக்கின் எல்லை பிரச்சனையில் சீனாவுக்கு மறைமுகாக விடுக்கப்பட்ட செய்தியாக பார்க்கப்படுகிறது.

  10ம் தேதி மாஸ்கோ பயணம்

  10ம் தேதி மாஸ்கோ பயணம்

  இதனிடையே செப்டம்பர் 10 ம் தேதி எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் அடுத்த வாரம் மாஸ்கோவிற்கு செல்லவுள்ளார். அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கை முதல் முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு எல்லையில் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவான மறுஆய்வு செய்வதற்காக ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே இரண்டு நாள் பயணமாக லடாக்கில் உள்ளார்.

  இரு முனை தாக்குதல்கள்

  இரு முனை தாக்குதல்கள்

  முன்னதாக, இந்திய அமெரிக்க தந்திரோபாய கூட்டுறவு மன்றம் நடத்திய இணையவழி கருத்தரங்கு கூட்டத்தில் பேசிய இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இந்தியா இரு முனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முழு வீச்சில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

   
   
   
  English summary
  Defence Minister Rajnath Singh meeting the Chinese Defence Minister, General Fenghe in Moscow, Russia. This was the first high-level meeting between the two sides after the border dispute escalated in eastern Ladakh early in May although External Affairs Minister S Jaishankar had earlier held telephonic talks with his Chinese counterpart Wang Yi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X