For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். இந்துக்கள் சமமான குடிமகன்கள்.. தாக்கினால் அவ்வளவுதான்.. இம்ரான் கான் எச்சரிக்கை.. சிக்ஸர்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு இஸ்லாமிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் கலவரம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.

நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா? எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடிநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா? எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி

இம்ரான் கான்

இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட் செய்துள்ளார். அதில், பல லட்சம் பேர் இருக்கும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடு இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா போன்ற ஒரு நாட்டை நாசி ஸ்டைல் அரசியல் செய்யும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வருகிறது. வெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும் போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும். பெரும் ரத்த வெள்ளத்தை ஓட வைக்கும். அதுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.

ஐநா எப்படி

ஐநா பொதுக்கூட்டத்தில் நான் கடந்த வருடம் இதை பற்றி பேசி இருந்தேன். நான் என்னுடைய பேச்சில் இணைத்தது போலவே இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது. விளக்கில் இருந்து ஜீனி வெளியே வந்ததும் இந்தியாவில் இன்னும் அதிக ரத்த ஆறு ஓடும். காஷ்மீர் என்பது தொடக்கம்தான். இந்தியாவில் 200 மிலியன் இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர்.

உடனே செயல்பட வேண்டும்

உலக நாடுகள் உடனே செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதே சமயம் நான் பாகிஸ்தானில் இருக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுகிறேன். பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் அல்லாத குடிமகன்களை யாரும் குறி வைக்க கூடாது. அதேபோல் அவர்களின் வழிபாட்டு தளங்களை தாக்க எண்ண கூடாது. அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன்.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

நம்முடைய நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரும் மற்றவர்களை போல சமமான குடிமகன்கள்தான், என்று இம்ரான் கான் குறிப்பிட்டு இருக்கிறார். மிக முக்கியமான நேரத்தில் இம்ரான் கான் இப்படி பொறுப்பாக டிவிட் செய்து இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நல்ல பிரதமர் இப்படித்தான் ஒற்றுமை குறித்து பேச வேண்டும், ஒருமைப்பாடு குறித்து பேச வேண்டும், என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

English summary
Delhi Violence: Minorites in Pakistan are equal says, Pakistan Prime Minister Imran Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X