For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெலிவரி செய்ய வந்த ஃபிங்கர் சிப்ஸை பிரித்து சாப்பிட்ட ஊழியர்

டெலிவரி செய்ய வந்த இடத்தில் கொண்டு வந்த உணவை ஊழியரே சாப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: உட்கார்ந்த இடத்தில இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ உங்களுக்குதான் இந்த வீடியோ நியூஸ்!!

ஒருவருக்கு ஃபிங்கர் சிப்ஸ் சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. அதனால் ஒரு பிரபலமான ஃபுட் ஏஜென்சிக்கு போன் செய்து ஃபிங்கர் சிப்ஸ் ஆர்டர் செய்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டுக்கு "டெலிவரி பாய்" அதை வண்டியில் வைத்து கொண்டு வருகிறார்.

 திருட்டுத்தனம்

திருட்டுத்தனம்

ஆனால் வந்தவர் வீட்டுக்குள் போகாமல் வாசப்படியிலேயே நின்று கொண்டு, பார்சலை பிரித்து, ஃபிங்கர் சிப்ஸை எடுத்து சாப்பிடுகிறார். அதற்கு பிறகு வீட்டின் காலிங் பெல் அடிக்கிறார். இப்படி திருட்டுத்தனமாக டெலிவரி பாய் சாப்பிடும் காட்சியை வீட்டு உரிமையாளர் பார்த்துவிட்டார்.

 வைரலாகி வருகிறது

வைரலாகி வருகிறது

ஆசை ஆசையாக சாப்பிட வந்த ஃபிங்கர் சிப்ஸை விட்டுவிட்டு முதல்வேலையாக அந்த டெலிவரி பாய் பற்றி புகார் அளித்தார். டெலிவரி பாய் ஃபிங்கர் சிப்ஸ் சாப்பிடும் காட்சி இப்போது வைரலாகி வருகிறது. ஆர்டர் செய்து வரவழைக்கும் பொருட்கள் எல்லாம் சரியான அளவுடன் இருக்கிறதா என்பதை பெரும்பாலானோர் பார்ப்பதே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த வீடியோ!

உபேர் ஈட்ஸ்

இந்த சம்பவம் நடந்தது மெல்போர்ன் நகரில். அங்குள்ள உபேர் ஈட்ஸ் உணவு நிறுவனத்தின் டெலிவரி பாய்தான் இந்த சேட்டையைச் செய்து மாட்டியுள்ளார். தமிழகத்திலும் கூட இதுபோன்ற ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவரி பாய்கள் தாங்கள் கொஞ்சம் சாப்பிட்டு விட்டே கஸ்டமர்களுக்குக் கொடுப்பதாக சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம்.

 காக்காய் உணவு

காக்காய் உணவு

ஆனால் இப்படி திருட்டுக் கடி கடிப்பது உலகம் பூராவும் இருக்கும் போல. இதுபோல டெலிவரியில் உணவு வாங்கினால், காக்காய்க்கு வைத்ததாக நினைத்துக் கொண்டு கண்ணை மூடி சாப்பிட வேண்டும் போல.

English summary
Delivery boy eats customer's food before delivering Viral Video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X