For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவயானி கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Devyani arrest: US official made serious mistake in reading paperwork, says lawyer
வாஷிங்டன்: விசா விண்ணப்பத்தில் பணிப்பெண் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டாலர் என்று தேவ்யானி குறிப்பிட்டிருந்தார். இதனை சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவ்யானி, சங்கீதாவுக்கு 1560 டாலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவ்யானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.

இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவ்யானி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என டேனியல் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
Devyani Khobragade's lawyer today said US authorities goofed up in the investigation and arrest of the Indian diplomat on charges of visa fraud as a federal agent made a "serious" mistake in reading the paperwork submitted regarding her domestic help's salary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X