For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவயானி வழக்கை கைவிடப் போவதில்லை- அமெரிக்கா பிடிவாதம்

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை கைவிடப் போவதில்லை என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை களையப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Devyani

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது.

இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த பிரச்சினையில் இப்படி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் தேவயானி வழக்கு விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவயானிக்கு எதிரான வழக்கை தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜனவரி 13ந் தேதிக்குள் தேவயானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் தேவையான ஆவணங்களை அமெரிக்கா சேகரித்து வருகிறதாம்.

English summary
The US on Monday ruled out an apology to India over the arrest of senior Indian diplomat Devyani Khobragade and said that it will not "withdrawing" the alleged visa fraud case against her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X