For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாயில் வீசிய கொடூரமான புயல்.. மொத்தமாக செயலிழந்த ரோவர்.. புலம்பும் நாசா

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது மோசமான செவ்வாய் கிரக புயல் காரணமாக மொத்தமாக செயலிழந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது மோசமான செவ்வாய் கிரக புயல் காரணமாக மொத்தமாக செயலிழந்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா ரோவர் என்ற ரோபோ வாகனத்தை அனுப்பி உள்ளது. இதன் பெயர் க்யூரியாசிட்டி. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும்.

இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. உலகில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய முதல் ரோவர் இதுதான்.

தங்கியது

தங்கியது

இந்த ரோவர் இவ்வளவு நாட்களாக எல்லா புயலிலும் தாக்குப்பிடித்தது. செவ்வாய் கிரகம் அடிக்கடி புயல் அடிக்க கூடிய கிரகம் என்பதால் அதற்கு ஏற்றார் போலத்தான் வடிவமைக்கப்பட்டது. இதனால் அதற்கு ஏற்றபடி, இந்த ரோவர் செயலாற்றி வந்தது. புயல் காரணமாக இதுவரை ஒருமுறை கூட ரோவர் செயலிழந்தது கிடையாது.

மிகவும் பெரிய புயல்

மிகவும் பெரிய புயல்

இந்த நிலையில் நேற்று இரவு செவ்வாய் கிரகத்தில் பெரிய புயல் வீசியுள்ளது. இதுவரை செவ்வாய் கிரக வரலாற்றில் வீசாத புயல் என்று கூறப்படுகிறது. செவ்வாயின் முக்கால் பகுதியை இந்த புயல் மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தை அப்படியே சுற்றி சுற்றி வரும் என்று கூறப்படுகிறது.

தொடர்பு துண்டிக்கப்பட்டது

தொடர்பு துண்டிக்கப்பட்டது

இதனால் தற்போது ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கொஞ்சம் கொஞ்சமாக ரோவரை நெருங்கி வரும் போது, அதை ரோவர் படம் பிடித்துள்ளது. ஆனால் கடைசி புகைப்படத்திற்கு பின் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரோவர் இயங்காமல் இருந்துள்ளது. கடந்த 24 மணி நேரமாக தொடர்பு கொண்டும் அதனிடம் இருந்து பதில் இல்லை.

வரும்

வரும்

ஆனால் அதன் பாகம் எதுவும் இதுவரை உடையவில்லை என்று நாசா கூறியுள்ளது. இதனால் அது மீண்டும் செயல்பட தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதில் பிரச்சனை ஏற்பட்டால் அதுவாக சரி செய்து கொள்ளும் வகையில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இன்னும் இரண்டு நாட்கள் அதனுடைய தொடர்புக்காக காத்திருக்க இருக்கிறார்கள்.

English summary
Dhivya Suryadevara is belongs to India. She born and brought up in Chennai. She has become a first woman of US biggest auto company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X