For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுருண்ட இந்திய அணி.. இப்போ தெரிகிறதா தோனி அருமை.. வைரலாகும் "அந்த" ஸ்கோர்

Google Oneindia Tamil News

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வரலாறு காணாத அளவுக்கு குறைந்த ரன்களில் சுருண்டு புதிய 'ரெக்கார்டு' செய்துவிட்டது.

இப்படி ஒரு அசிங்கம் நமது டீமுக்கு, இதற்கு முன்பு ஏற்பட உருவான வாய்ப்புகளை, தோனி தக்க சமயத்தில் வந்து தடுத்து காப்பாற்றியதை நெகிழ்ச்சியோடு இப்போது நினைத்து பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஆஸ்திரேலியில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தது, டி20 தொடரை வென்றது.

ஞாயிறு காலை 10 மணிக்கு.. ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்.. திமுக அறிவிப்பால் பரபரப்புஞாயிறு காலை 10 மணிக்கு.. ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்.. திமுக அறிவிப்பால் பரபரப்பு

கோலி அபாரம்

கோலி அபாரம்

இந்த நிலையில்தான், அடிலெய்டில் முதல் டெஸ்ட் தொடங்கியது. இரவு-பகல் போட்டியாக இது நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறினாலும், கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் பங்களிப்பால் கவுரமான ஸ்கோரை எட்டியது. முதல் இன்னிங்சில் ஆஸி.யை குறைந்த ஸ்கோரில் மடக்குவதில் நமது பவுலர்கள் வெற்றி கண்டனர்.

படு மோசம்

படு மோசம்

அதுவரை எல்லாம் நல்லாகத்தான் போனது. ஒரு அனல் பறக்கும் டெஸ்ட் போட்டியாக அது அமைந்து இருந்தது. ஆனால் 2வது இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சரணடைந்துவிட்டனர். கோலி உட்பட எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் இரட்டை டிஜிட் ரன்னை எட்ட முடியாதது பெரும் கொடுமை. 9 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை இந்தியா எடுத்திருந்தபோது, காயம் காரணமாக ஷமி ஓய்வு பெற்றார். எனவே இந்திய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த ரன்னில் இந்தியா சுருண்டது இதுதான் முதல் முறை.

 ஆஸ்திரேலியா எளிதான வெற்றி

ஆஸ்திரேலியா எளிதான வெற்றி

இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. கோலி தலைமையிலான அணி இப்படி தடுமாறிய நிலையில்தான், தோனியை நினைவு கூர்ந்து சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோனி எப்படி அணியின் மானத்தை காப்பாற்றினார் என்பதை ஸ்கோர்கார்டை ஷேர் செய்து நெகிழ்கிறார்கள்.

காப்பாற்றிய தோனி

2014ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி அது. கோலி டக்அவுட்டானார். பல வீரர்களும் நடையை கட்டினர். 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ஆனால் தோனி 71 ரன்கள் விளாசி, இந்தியா 152 ரன்களை எட்ட உதவினார். அஸ்வினும் நல்ல கம்பெனி கொடுத்து அணியை தேற்றினார்கள்.

தோனிதான் பினிஷர்

தோனிதான் பினிஷர்

இதற்கு அடுத்த டெஸ்ட்டிலும் அப்படித்தான். 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஆனால் தோனி 82 ரன்கள் அடித்து இந்தியா 148 ரன்களை எட்ட உதவினார். இவர்தான் அருமையான பினிஷர் என்கிறார்கள் ரசிகர்கள். ஒன்டே மட்டுமல்ல, டெஸ்ட் போட்டியிலும் தோனி சிறந்த பினிஷராக இருந்துள்ளார். ஆனால், இப்போதைய டீமிலுள்ள பேட்ஸ்மேன்கள், டீமைத்தான் பினிஷ் செய்து வருகிறார்கள் என்பதுதான் ரசிகர்கள் கோபம்.

English summary
In the first Test against Australia, the Indian team set a new 'record' by rolling in unprecedented low runs. Now Dhoni fans reminds his saviour innings againist England.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X