For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகில் அதிகம் சம்பாதிக்கும் ஃபோர்ப்ஸ் விளையாட்டு வீரர்கள் பட்டியல்... டோனிக்கு 22–வது இடம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி ரூ.178 கோடிகளுடன் 22வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்க வணிக பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்' உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் முதல் 2014-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வென்ற பரிசுத்தொகைகள், போனஸ், போட்டி கட்டணம் மற்றும் விளம்பர வருவாய் போன்றவை குறித்து கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பட்டியல் ஒன்றைத் தயாரித்துள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.

Dhoni in Forbes list of world's highest paid athletes

முதலிடத்தில்....

அந்த டாப்-100 பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் புளோய்ட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். 46 வயதான் மேவெதர் கடந்த ஓராண்டில் சம்பாதித்த தொகை ரூ 623 கோடியாகும்.

72 நிமிட உழைப்பு...

இந்தத் தொகையை சம்பாரிக்க தொழில்முறை குத்துச்சண்டையில் 46 ஆட்டங்கள் விளையாடியுள்ள மேவெதர், அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் குத்துச்சண்டை களத்தில் செலவிட்ட நேரத்தை கணக்கிட்டால், அவை வெறும் 72 நிமிடங்கள் தான் என தெரிய வந்துள்ளது.

2வது இடத்தில் ரொனால்டோ...

மேவெதரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். போர்ச்சுகல் அணி மட்டுமின்றி ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் கிளப்புக்காகவும் விளையாடி வரும் இவர் கடந்த 12 மாதங்களில் ஈட்டிய தொகை ரூ.475 கோடியாகும். இதில் விளம்பர வருவாய் ரூ.166 கோடியும் சேரும்.

4வது இடத்தில் மெஸ்சி...

இந்த வரிசையில் மற்ற பிரபல கால்பந்து வீரர்களான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி 4-வது இடத்திலும் (ரூ.383 கோடி), பிரேசிலின் நெய்மர் 16-வது இடத்திலும் (ரூ.199 கோடி) உள்ளனர்.

பின் தங்கிய டைகர் வுட்ஸ்...

வழக்கமாக இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க கோல்ப் பந்தய வீரர் டைகர் வுட்ஸ் இம்முறை ரூ.362 கோடியுடன் 6-வது இடத்தில் பின்தங்கி விட்டார்.

ரோஜர் பெடரருக்கு 7வது இடம்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதையும் வெல்லாத டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்தப் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்தாண்டில் விளம்பரம் மூலமே இவர் சம்பாதித்தது ரூ 308 கோடியாகும். மொத்த ஆண்டு வருமானம் ரூ. 333 கோடி.

ஒரே இந்திய வீரர்...

இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி மட்டுமே. ரூ.179 கோடியுடன் டோனி 22-வது இடத்தை பிடித்துள்ளார்.

விளம்பரங்கள் மூலமாக...

டோனிக்கு சம்பளம், பரிசுத்தொகையை விட விளம்பரம் மூலம் தான் அதிக வருவாய் கிடைத்துள்ளதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. அதாவது மொத்த ஆண்டு வருமானத்தில் விளம்பரங்கள் வாயிலாக டோனி பெற்ற பணம் ரூ.154 கோடி ஆகும்.

முதல் கேப்டன்...

மேலும், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கும் டோனி, ஒரு நாள் போட்டி உலககோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவர் என ஃபோர்ப்ஸ் புகழ்கிறது.

வீராங்கனைகள்...

சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ரூ.145 கோடியுடன் 34-வது இடத்திலும், மற்றொரு டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.130 கோடியுடன் 55-வது இடத்திலும் உள்ளனர்.

English summary
Indian cricket team captain Mahendra Singh Dhoni is the lone Indian sportsman to figure on Forbes' list of world's 100 highest paid athletes. Dhoni is ranked 22nd on the list with total earnings of $30 million and endorsements worth $26 million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X