For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்தே படலையே.. துல்லியமாக கணித்த கில்லி டோனி.. டிஆர்எஸ்ஸை கரெக்ட்டாக பயன்படுத்தி அசத்திய தல!

Google Oneindia Tamil News

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்திலேயே கேப்டன் மகேந்திர சிங் டோனி அவுட் என அம்பயர் அறிவித்த நிலையில் டெஷிஷன் ரிவ்வியூ சிஸ்டமை பயன்படுத்தி நாட் அவுட்டானார். இதனால் ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே ஆரவாரம் செய்தனர். டிஆர்ஸ் முறையில் டோனி எப்போதும் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.

13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி வாகை சூடியது.

மாறி மாறி விளாசிய பாண்டியா.. விரக்தியோடு பந்து வீசிய ஜடேஜா.. களத்திலேயே நடந்த மோதல்.. ஏன் இந்த பகை?

வித்தியாசமான தோற்றம்

வித்தியாசமான தோற்றம்

கொரோனா பீதியால் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனினும் ஆட்டத்தின் போது செயற்கையான விசில் சப்தங்கள், கைதட்டல்கள் எழுப்பப்பட்டதால் அவை கிரிக்கெட் ஆட்டத்தின் ரியாலிட்டியை நம் கண் முன் கொண்டு வந்தன. ஒவ்வொரு ஆட்டத்தின் போது வித்தியாசமான தோற்றத்துடன் வரும் டோனி இந்த முறை குறும்தாடியுடன் களமிறங்கினார்.

சர்வதேச போட்டி

சர்வதேச போட்டி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியின் ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வழக்கமாக ஏப்ரல் மாதம் இந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் கொரோனாவால் 438 நாட்களுக்கு பிறகு தொடங்கியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் டோனி 7ஆவது பேஸ்ட் மேனாக ஆடினார். அப்போது பும்ரா வீசிய முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டோனியின் இடதுபக்கம்

டோனியின் இடதுபக்கம்

பும்ரா வீசிய அந்த பந்து டோனியின் இடதுபக்கமாக சென்று வீக்கெட் கீப்பர் டி காக்கை அடைந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அவுட் கோரினர். இதையடுத்து அம்பயரும் அடுத்த நொடியே அவுட் என ஒற்றை கையை தூக்கினார். உடனே டோனி ரீவியூ கேட்டார்.

அம்பயரின் முடிவை எதிர்த்து

அம்பயரின் முடிவை எதிர்த்து

அதில் பும்ரா வீசிய பந்து டோனியின் பேட்டில் படவே இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அம்பயரும் நாட் அவுட் என அறிவித்தார். இந்த முறைக்கு பெயர் டிஆர்எஸ் என்பதாகும். அதாவது டெசிஷன் ரிவியூ சிஸ்டம் (Decision Review System) ஆகும். அம்பயரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வதாகும்.

டிஆர்எஸ் என்றால் என்ன?

டிஆர்எஸ் என்றால் என்ன?

இந்த முறை 2008-ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் மேட்டின் போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அம்பயர் டெஷிஷன் ரிவியூ சிஸ்டம் என்றும் அழைப்பார்கள். இந்த முறை கடந்த 2009-ஆம் ஆண்டு நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பானது ஒவ்வொரு அணிக்கும் இரு முறை வழங்கப்படும்.

English summary
Dhoni had gone for DRS system after umpire says he is out in his first ball. He again proved that he is king in DRS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X