For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய்

By BBC News தமிழ்
|

நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. ரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரையின் அளவு, ஊசிகள் மற்றும் கணக்கீடுகளுடன் தான் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கும்.

உங்களுக்கு நீரிழிவு நோயும் உணவு முறை குறைபாடும் இருந்தால், உங்கள் வாழ்க்கையை பல்வேறு வகையான எண்கள்தான் வழிநடத்தும், கலோரிகள் எனப்படும் உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவிலிருந்து அனைத்தையும் அளவீடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும்.

எனக்கு டையபுலிமியா (diabulimia) எனும் நோய் உள்ளது. அதாவது புலுமியா(bulimia) எனப்படும் உணவு குறைபாடு நோயும் நீரிழிவு நோயும் சேர்ந்த ஒரு கலவை இது. பொதுவாக இந்த நோயை வகை 1 நீரிழிவு நோய் ( type 1 diabetes) என்று கூறுவர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்வார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன் எனது 19-வது வயதில் எனக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. வகை 2 நீரிழிவு நோய் ( type 2 diabetes) போன்று இல்லாமல், இது உங்களுடைய வாழ்வியல் முறை மற்றும் உணவு முறையுடன் இணைந்திருக்கும். வகை 1 நீரிழிவு என்பது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பே, உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உயிரணுக்களை தாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும். இதற்கான அறியப்பட்ட காரணங்கள் என்று எதுவும் இல்லை மற்றும் இது குணப்படுத்த இயலாத ஒன்று.

எனது உடல் எடைதான் எனக்கு நீரிழிவு நோய் உண்டாகுவதற்கு காரணம் என மக்கள் நினைத்துகொள்வார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாம் உண்ணும் உணவில் இருந்து சர்க்கரையை பிரித்து அதை ஆற்றலாக மாற்றுவதற்கு இன்சுலின் உதவி இல்லாமல் குளுக்கோசை செயலாற்ற முடியாது. டையபுலிமியா நோய்க்கு பின்னணியில் உள்ள அடிப்படை அறிவியல் இதுதான்.

இதற்கு மாறாக, உடலில் உள்ள உயிரணுக்கள் ஏற்கனவே உடலில் சேகரித்துவைத்துள்ள கொழுப்பை பிரித்து, கூடுதலாக இருக்கும் சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றன. ஒருவேளை உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு கொழுப்பு இல்லை என்றால், தசைகள் மற்றும் எழும்புகளின் மூலமாக உடல் தனது ஆற்றலை எடுத்துக் கொள்ளும்.

ஒரு சிலர் உடல் எடையை அதிகரிக்க உணவை எடுத்துக் கொண்டு பின்னர் இன்சுலினை வெளியேற்றுவர். ஆனால், நான் பசியுடன் இருந்து கொண்டே இன்சுலினை வெளியேற்றுகிறேன்.

மிகவும் மோசமான சூழ்நிலைகளில் இதய செயலிழப்பு, கை கால் மூட்டுகள் செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவை நேரிடும். ஆனால், இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்.

பிரிட்டனில் 4 லட்சம் மக்கள் வகை 1 நீரிழிவு நோயுடன் ( type 1 diabetes) வாழ்ந்து வருகின்றனர். இதேவேளையில், வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60% பெண்கள் 25 வயதில் உணவு முறை குறைபாடை சந்திப்பதாக கனாடவின் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

இருப்பினும் டையபுலிமியா நோய் இன்னும் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. அதாவது, இந்த நோய்க்கு சிறப்புவாய்ந்த சிகிச்சைமுறைகள் பற்றாக்குறையாகவே உள்ளது.

நீரிழிவு நோயுடன் கூடிய உணவு முறை குறைபாடு என்பது (Diabetics With Eating Disorders - DWED) ஒரு மனநோயகாவும் அங்கீகரிக்கப்பட ஆண்டுகள் ஆனது. ஜாக்குலி ஆலன் இதற்கான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவது எவ்வளவு கடினமானது என்பது அவருக்கு தெரிந்தே இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவரது தோழி ஒருவர் இறந்த பின்பு 2009-ல் இந்த தொண்டு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.

"மருத்துவ ரீதியாக இது அங்கீகரிக்கப்படவில்லை. பெரிய கையேடுகள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட நோய்களின் பட்டியலிலும் இது இல்லை" என்று ஜாக்குலி ஆலன் கூறுகிறார்.

எனது எட்டு வயதில் இருந்தே கண்டறியப்படாத உணவு முறை குறைபாட்டால் நான் போராடினேன். எனது ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்காலங்களில் நான் மற்ற மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டேன். முன்பு இருந்ததை விட எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்வதை என்னால் உணர முடிந்தது. முகம் மற்றும் கைகள் பருமணாவது உள்ளிட்ட பசியின்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் உணவினை தவிர்க்க தொடங்கினேன். ஆனால், 20 வயது வரை இதை நான் கண்டறியவில்லை.

நான் எப்போது உணவு உட்கொண்டேன் என்ன உணவை உட்கொண்டேன் என்பதில் பொய்யான தகவல்களைக் கூறி எனது குடும்பத்திடம் இருந்து இதை மறைத்தேன். நான் தொடர்ந்து நடன வகுப்புகளின் இருந்தேன், எனது எடை குறைவிற்கு இது ஒரு காரணம் என நான் விளக்கினேன்.

இன்சுலின் செலுத்துவதை நிறுத்தினால் எனது உடல் எடையை குறைக்க முடியும் என்ற உணர்வு நம்பிக்கையை தூண்டும் விதமாக இருந்தது. பின்னர் உணவு மற்றும் இன்சுலின் எடுத்துக் கொள்வதை நான் நிறுத்தினேன். அங்கிருந்துதான் அனைத்து மாற்றங்களும் தொடங்கியது.

நீரிழிவு நோயும் உணவுமுறை குறைபாடும் ஒன்றுக்கொன்று உத்வேகமடைந்தன. நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டால், எவ்வித உணவுகளை உட்கொள்ள வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்பது குறித்த கடுமையான விதிகளை பின்பற்றி விழிப்போடு இருக்க வேண்டும்.

ஆனால், அதை நான் முறையாக பின்பற்றாத காரணத்தால் உணவுமுறை குறைபாட்டை அது மேலும் அதிகரித்தது.

எனக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஓராண்டுக்குப் பின், மூன்று முறை நீரிழிவு நோயால் கோமா நிலைக்கு சென்ற நான், ஒரு மன நல மருத்துவக் குழுவிடம் செல்ல பரிந்துரைக்கப்பட்டேன். அங்கு என் உணவுப் பழக்கத்தில் குறைபாடு இருப்பது ஒரு வழியாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த நோயுடன் நான் வாழ்ந்தேன்.

2011-ம் ஆண்டு எனக்கு 22 வயதான போது, ஸ்காட்லாந்தின் அபெர்டீன் நகரில் உணவுமுறை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் எடன் யூனிட் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டேன். அந்த மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக உள்நோயாளியாகவும், 16 ஆண்டுகளாக புற நோயாளியாகவும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் சிகிச்சை பெற்றேன்.

2013-ல் இறுதியாக நான் அனுமதிக்கப்பட்ட போது, நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். மருந்துகள், தொலைபேசி என முக்கியமான பொருட்கள் அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டன.

என்னால் நேரடியாக உணவினை உட்கொள்ள முடியவில்லை. நான் மிகவும் பயந்திருந்தேன். அதனால், குழாயின் மூலம் எனக்கு உணவளிக்கப்பட்டது.

இன்சுலின் பற்றி சிந்திப்பதற்கும், உணவின் மீதான அச்சத்தை நீக்குவதற்கும் எனது மூளையை நான் பழக்கப்படுத்த வேண்டிருந்தது. எனது உருவத்திற்கேற்ப ஆடையின் அளவுகளை மாற்றுவதில் சிரமத்தை சந்தித்தேன்.

டையபுலிமியாவில் இருந்து விடுபடுவது என்பது கட்டுப்பாடாக இருப்பதே இன்சுலின் குறித்த கட்டுப்பாடு, உணவின் மீதான கட்டுப்பாடு மற்றும் வாழ்வின் மீதான கட்டுப்பாடு. இறுதியாக, எனது வாழ்க்கைக்கு நான் திரும்புவதாக உணர்ந்தேன்.

ஆனால் எனக்கு அதிர்ஷடம் இருந்தது. அபாயங்களும் சிக்கல்களும் ஒன்றுக்கொன்று இணைந்து வரும் டையபுலிமியா மிகவும் ஆபத்தானது.

இதற்கான சிகிச்சை முறை மிகவும் புதிதான ஒன்று என்பதால் எடென் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும், நோயாளிகளும் சேர்ந்தே இந்த நோயில் இருந்து விடுபடுவது குறித்து கற்றனர்.

நான் நோயில் இருந்து விடுபட்டு நலமடைந்து விட்டதாக சிலர் கூறலாம், ஆனால் அவ்வாறு கூறுவதை நான் விரும்பவில்லை. இதை சமாளிக்க நான் இன்றளவும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

உதாரணமாக, மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் மருத்துவர்களை நான் சென்று சந்தித்து வருகிறேன்.

தற்போது நான் இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேற கடுமையாக உழைத்து வருகிறேன். அப்போது தான் என்னால் இருசக்கர வாகனத்தை இயக்க முடியும், எப்போதும் போல் நடனமாட முடியும். ஒவ்வொரு நாளையும் யதார்த்தாமாக எதிர்கொள்ள நான் முயற்சிக்கிறேன்.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
More than 750,000 people in the UK are affected by an eating disorder - but what happens when you have type 1 diabetes and misuse insulin in order to dramatically lose weight?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X