For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில்... 100 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த லத்தீன் மொழி அகராதி வெளியீடு!

Google Oneindia Tamil News

லண்டன்: கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப் பட்ட லத்தீன் மொழி அகராதியானது இங்கிலாந்தில் வெளியிடப் பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி லத்தீன் மொழிக்கான விரிவான அகராதி இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இது இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட லத்தீன் மொழி குறித்த விரிவான அகராதி ஆகும்.

இந்த அகராதிக்கான தொடக்க வேலை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரம்பிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளுக்கு முன்....

100 ஆண்டுகளுக்கு முன்....

கடந்த 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ராபர்ட் ஜே விட்வெல் என்பவரால் புதிய லத்தீன் அகராதி தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த முயற்சி பிரிட்டிஷ் அகாடமியின் மேற்பார்வையில் நடைபெற்றது.

4,000 பக்கங்கள்...

4,000 பக்கங்கள்...

4,000 பக்கங்களைக் கொண்ட இந்த 17 தொகுப்புகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் 58,000 க்கும் மேற்பட்ட வார்த்தைகளை இணைத்துள்ளனர்.

ஆதாரத்துடன்....

ஆதாரத்துடன்....

கடந்த 100 ஆண்டுகளாக இந்தத் திட்டம் முறையாக ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் பொருள் மற்றும் பயன்பாடுக்கான ஆதாரத்துடன் சரி பார்க்கப்பட்டு இந்த அகராதியில் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாற்ரு அறிஞர்கள்...

வரலாற்ரு அறிஞர்கள்...

இதன் ஆரம்பக்கட்டப் பணி பெரும்பாலும் வரலாற்று அறிஞர்கள், மத குருமார்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் போன்றவர்களால் செய்யப்பட்டுள்ளது.

உண்மைப் பதிப்புகளை சரிபார்த்து...

உண்மைப் பதிப்புகளை சரிபார்த்து...

இவர்கள் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி தயாரிப்பை ஒத்த முறையில் பழங்காலத்து உண்மைப் பதிப்புகளை சரிபார்த்து இந்த அகராதியை வடிவமைத்து வந்துள்ளனர்.

விரிவான சொல்லகராதி...

விரிவான சொல்லகராதி...

இது கி.பி 540 முதல் 1600 முடிய இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்த லத்தீன் மொழிக்கான விரிவான சொல்லகராதி ஆகும் என இந்த அகராதியின் எடிட்டரும், ஆக்ஸ்போர்ட் உறுப்பினருமான டாக்டர் ரிச்சர்ட் ஆஷ்டவுன் தெரிவித்துள்ளார்.

வருங்காலத் தலைமுறைக்காக...

வருங்காலத் தலைமுறைக்காக...

மேலும், ஒரு மொழியின் ஆரம்பகால வரலாறு மற்றும் அதன் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள அகராதிகள் வருங்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பிரிட்டிஷ் ஆதாரங்களைக் கொண்டு இந்தப் பணி முடிக்கப்பட்டிருப்பது அம்மக்களின் மனிதநேயப் பண்புகளை வெளிக்காட்டும்விதமாக அமைந்துள்ளது என லத்தீன் அகராதி கமிட்டி தலைவரும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் லத்தீன் மொழிப் பேராசிரியருமான டோபியாஸ் ரீன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

English summary
A dictionary of medieval Latin - described as "the most comprehensive study ever" - has finally been completed, a century after the project began
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X