For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போடு மாமா, போடு மாமா.. அஸ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்.. முழித்த இங்கி. பேட்ஸ்மேன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அஸ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்..வீடியோ

    பிர்மிங்கம்: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரையும், இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் வெற்றி பெற்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பிர்மிங்கம் நகரிலுள்ள, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    Dinesh Karthik encourages Ravichandran Ashwin in Tamil

    சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திற்கும் அவ்வாறே. இருவருமே தமிழக வீரர்கள் என்பதால், தமிழிலேயே பேசிக்கொள்கிறார்கள்.

    நேற்று ஒரு ஓவரின்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீச, அதை பார்த்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்படி கூறுகிறார்,

    டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ மாமா.. என்றார். இடதுகை பேட்ஸ்மேனுக்கு அஸ்வின் வீசிய பந்து மிடில் ஸ்டெம்ப் லைனில் விழுந்து, பவுன்ஸ் மற்றும் சுழன்று ஆப்ஸ்டெம்புக்கு வெளியே சென்று விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது. இதைத்தான் தினேஷ் கார்த்திக் இப்படி பாராட்டினார்.

    அதே ஓவரில், மற்றொரு பந்துக்கு, கார்த்திக் "நல்லாருக்கு அஸ்வின்.. நல்லாருக்கு அஸ்வின்" என்றார்.

    மற்றொரு பந்தை பேட்ஸ்மேன் தடுப்பாக ஆட, கார்த்திக் "போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் மாமா அஸ்வின்.." என கூற, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களோ ஒன்றுமே புரியாமல் திருதிருவென விழித்தனர்.

    ஸ்டெம்பில் உள்ள மைக் மூலம், டிவியில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கும் இது நன்கு கேட்டது. உள்ளூர் பசங்க கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கும் தமிழ் கமெண்ட்போல சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்கிறார்கள்.

    English summary
    Dinesh Karthik spoke in Tamil with bowler Ashwing for motivation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X