For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணுவைப் பிளந்தால் "ஆம்புலன்ஸ், ஹாஸ்பிடல்"... ஆச்சர்யம் தரும் டிஎன்ஏ மர்மங்கள்!

Google Oneindia Tamil News

டொரண்டோ: கடுமையாக சேதமடைந்த டி.என்.ஏ.வானது எப்படி செல்லிற்குள் செல்கிறது, பின்னர் அது எவ்வாறு தன்னை ரிப்பேர் செய்து கொள்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், புற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்க இயலும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

எந்த வகையினரையும் தாக்கும் கொடிய நோய்களுள் ஒன்று புற்றுநோய். மேலை நாடுகளில் இந்த நோய்க்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகின்றன, அவை எவ்வாறு பரவுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடுமையாக சேதமடைந்த செல்கள், ரிப்பேர் செய்யப்பட்டு பின்னர் புற்றுநோய் செல்களாக மாறுவது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனை செல்கள்...

மருத்துவமனை செல்கள்...

இந்த ஆய்வு குறித்து டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் மெக்கெயில் கூறுகையில், "கடுமையாக சேதமடைந்த டி.என்.ஏ.க்கள் சில குறிப்பிட்ட விசேஷமான செல்லிற்குள் செல்கின்றன. அந்த செல்கள் கிட்டத்தட்ட ஒரு மருத்துவமனை போல செயல்படுகிறது. அதன் பின்னர் அங்கு அவை சரியாகிக் கொள்கின்றன.

ஆம்புலன்ஸ்...

ஆம்புலன்ஸ்...

ஆனால் இந்த செல்லுக்குள் எப்படி சேதமடைந்த டிஎன்ஏக்கள் சரியாக செல்கின்றன என்பதுதான் தெரியாமல் இருந்தது. இதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். கிட்டத்தட்ட ஒரு ஆம்புலன்ஸ் போல இந்த செல்கள் செயல்பட்டு சேதமடைந்த டிஏன்ஏக்களை கொண்டு செல்கின்றன.

சரிசெய்யப்பட்ட டி.என்.ஏ.க்கள்...

சரிசெய்யப்பட்ட டி.என்.ஏ.க்கள்...

இந்த டி.என்.ஏ. ஆம்புலன்ஸ் செல்லானது மோட்டார் புரோட்டின் காம்ப்ளக்ஸால் ஆனது. இந்த செல்தான், சேதமடைந்த டி.என்.ஏ.வை சரிப்படுத்துகிறது. சரி செய்யப்பட்ட டிஎன்ஏக்கள் தங்களது இயல்புக்கேற்ப பல்கிப் பெருகும்.

சந்தேகம்...

சந்தேகம்...

அதேசமயம், அதில் செல் குறிப்புகள் சரிவர இருக்காது. இதனால்தான் புற்று நோய் ஏற்படுகிறது என்று சந்தேகிக்கிறோம்.

புற்றுநோயாக மாறுகின்றன...

புற்றுநோயாக மாறுகின்றன...

சேதமடைந்த டிஎன்ஏக்களைக் கொண்ட செல்கள் வழக்கம் போல பெருகி வந்தாலும் கூட அதில் குறிப்புகள் முறையாக இல்லாமல் போவதால் அவை புற்றுநோயாக மாறுகின்றன.

உடையும் குரோமோசோம்கள்...

உடையும் குரோமோசோம்கள்...

மேலும் குரோமோசோம்கள் உடையும்போதும், சரி செய்யப்படாமல் போகும்போதும் புற்று நோய் ஏற்படுகிறது' என்றார் அவர்.

English summary
Researchers have discovered how severely damaged DNA is transported within a cell and how it is repaired - a discovery that can unlock secrets of how cancer operates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X