For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்

Google Oneindia Tamil News

ஜெனீவா : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் பயப்படவோ, தயங்கவோ தேவையில்லை என உலக சுகாதார மைய உதவி இயக்குனர் மரி ஏஞ்சலா சிமாவோ தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உலக சுகாதார மைய உதவி இயக்குனர் மரி ஏஞ்சலா சிமாவோ செய்தியாளர்களிடம் பேசினார்.

 Do Not Panic to take a Vaccine, Says WHO

அப்போது அவர், அனைத்து நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களும் தடுப்பூசிப் போட்டுக் கொள்வதை உறுதி செய்ய பாடுபட்டு வருகிறோம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் பயப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் நோயை தடுக்க தடுப்பூசி தான் போட்டுக் கொள்கிறீர்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மிகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி

சுமார் 50 நாடுகளில் தடுப்பூசி குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 40 நாடுகள் உயர் வருமானம் கொண்டிருக்கும் நாடுகள். இருந்தும் இவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர். பிப்ரவரி இறுதிக்குள் முதல் கட்ட தடுப்பு மருந்துகள் செலுத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

English summary
"No one needs to panic, because you're going to get a vaccine," said WHO's assistant director-general Mariangela Simao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X