For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத்தில் எவ்வளவு பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

உலக அளவில் பிரபல சமூக வலைத்தளமாக திகழும் ஃபேஸ்புக்கை 200 கோடி பேர் வரை பயன்படுத்துகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: உலக அளவில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 200 கோடி பேர் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பர்க் இன்று காலை வரை ஃபேஸ்புக்கில் 200 கோடி பேர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க், " உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இத்தனை கோடி பயனர்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது.

17% அதிகரிப்பு

17% அதிகரிப்பு

ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது" என்று மார்க் குறிப்பிட்டுள்ளார். மிகவேகமாக சமூக வலைத்தளத்தில் வளர்ந்துவிட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சியை வேறு நிறுவனம் தொட முடியும் என்பது சந்தேகமே.

அப்டேட் ஃபேஸ்புக்

அப்டேட் ஃபேஸ்புக்

புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிடுவதே பயனர்களை தங்களிடம் தக்கவைத்து கொள்வதற்கான தந்திரம் என்கிறார் மார்க். அண்மையில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் நேரலை வீடியோ வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார் மார்க்.

200 கோடி வாடிக்கையாளர்கள்

200 கோடி வாடிக்கையாளர்கள்

உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதன் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

194 கோடி பேர்

194 கோடி பேர்

கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை ஃபேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் வாடிக்கையாளர்கள் குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

English summary
How Many People Use Facebook Worldwide? 200 hundred crore facebook accounts are running.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X