• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூயஸ் கால்வாயில் சிக்கி.. உலக வணிகத்தையே முடக்கிய எவர் கிவன் கப்பல் நிலைமை இப்போ என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு உலக வணிகத்தையே ஸ்தம்பிக்க வைத்த எவர் கிவன் என்ற பெயர் கொண்ட பிரமாண்ட சரக்கு கப்பல் நிலைமை இப்போது என்ன தெரியுமா?

  என்ன ஆச்சு ? Suez கால்வாயில் மாட்டிய Ever Given Ship பஞ்சாயத்து | Oneindia Tamil

  கடந்த மார்ச் மாதம், எவர் கிவன், கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு பயணம் பட்டபோது எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது.

  இந்த கப்பல் 2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடை கொண்டது.

  வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்... தமிழகத்தில் மிக மிக கனமழை - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்... தமிழகத்தில் மிக மிக கனமழை - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

  சூயஸ் கால்வாய்

  சூயஸ் கால்வாய்

  மணல் புயல் வீசி, இதன்காரணமாக மாலுமி தடுமாறியதால் நடுவே கப்பல் நின்று போய்விட்டதாகவும், எனவே அந்தப் பகுதி வழியாக வேறு கப்பல்கள் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது . உலக வர்த்தகத்தில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான வழித்தடம் இதுவாகும். கால்நடைகள், வாகனங்கள், கச்சா எண்ணை என பலதரப்பட்ட பொருட்கள் கப்பல் வழியாக இந்த ரூட்டில் செல்லும்.

  டிராபிக் ஜாம்

  டிராபிக் ஜாம்

  எனவே, இந்த விபத்து காரணமாக பல்வேறு கப்பல் நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பொருளாதாரத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் பிரச்சினை உருமாறி விட்டது.

   டிராபிக் ஜாம் சரியானது

  டிராபிக் ஜாம் சரியானது

  இந்த கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களில் 25 பேர் இந்தியர்கள் ஆகும். அவர்கள் பாதுகாக்க மீட்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசின் கோரிக்கையாக இருந்தது. நல்லவேளையாக முழு நிலவு காரணமாக ஏற்பட்ட அலை சீற்றத்தால் கப்பலை மீட்கும் பணி எளிதாக நடைபெற்றது. இதையடுத்து ஒரு வாரம் கழித்து, டிராபிக் ஜாம் சரியாகி சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் இயக்கப்பட ஆரம்பித்தன.

   அதிக அபராதம்

  அதிக அபராதம்

  சூயஸ் கால்வாய், எகிப்து நாட்டின் அரசும், அதற்காக அமைக்கப்பட்ட நிர்வாகமும் மேற்பார்வை செய்து வருவாய் ஈட்டி வருகின்றன. இந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு கேட்டது சூயஸ் நிர்வாகம். அதுவும் ஒன்றிரெண்டு ரூபாய் இல்லை, 916 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது நமது நாட்டு மதிப்பில் சுமார் 6,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கினால்தான் கப்பலை விடுவிப்போம் அல்லது கப்பல் நகராது என எச்சரித்தது சூயஸ் நிர்வாகம்.

  அபராதம் குறைப்பு

  அபராதம் குறைப்பு


  எவர் கிவன் கப்பலின் உரிமையாளர் ஷோயி கிசென் கைஷா, இந்த தொகை ரொம்ப அதிகம் என்று கெஞ்சினார். இதையடுத்து, இரண்டு நிர்வாகத்தினருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடந்தன. இழப்பீட்டுத் தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது நமது மதிப்பில் சுமார் 4,108 கோடி ரூபாய் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் குறைத்தது. வேறு வழியில்லாமல், சூயஸ் கால்வாய் நிர்வாகம் கேட்ட பணத்தை வழங்குவதற்கு எவர் கிவன் கப்பலின் உரிமையாளர் ஒப்புக்கொண்டார். ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

  பயணத்தை துவங்கிய எவர் கிவன்

  பயணத்தை துவங்கிய எவர் கிவன்

  இந்த நிலையில்தான், சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக பிணையாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ‘எவர் கிவன்' கப்பலை, சூயஸ் கால்வாய் நிர்வாகம் நேற்று விடுவித்தது. இதையடுத்து அந்தக் கப்பல் நெதர்லாந்து நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. ஒரு வழியாக இந்த விவகாரம் 3 மாதங்களுக்கு பிறகு முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது.

  English summary
  Suez Canal: Do you know about the situation of the huge cargo ship named Ever Given, which got stuck in the Suez Canal and brought world trade to a standstill? The 193km (120-mile) Suez Canal connects the Mediterranean Sea at the canal's northern end to the Red Sea in the south and provides the shortest sea link between Asia and Europe.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X