For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு தடவை கடலை பார்க்கணும்.. சாகப் போகும் பெண்ணின் கடைசி ஆசை.. மருத்துவர்கள் செய்தது என்ன தெரியுமா?

இறப்பதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை கடலை பார்க்க வேண்டும் என்று தெரிவித்த பெண்ணின் கடைசி ஆசையை ஆஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று நிறைவேற்றி வைத்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு தடவை கடலை பார்க்கணும்.. சாகப் போகும் பெண்ணின் கடைசி ஆசை- வீடியோ

    சிட்னி: இறப்பதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை கடலை பார்க்க வேண்டும் என்று தெரிவித்த பெண்ணின் கடைசி ஆசையை ஆஸ்திரேலிய மருத்துவமனை நிர்வாகம் ஒன்று வித்தியாசமாக நிறைவேற்றி வைத்து இருக்கிறது.

    பல நாட்களாக அவர் கேட்டுக் கொண்டு இருந்த இந்த கோரிக்கையை அந்த மருத்துவமனை சர்ப்ரைசாக நிறைவேற்றி இருக்கிறது. மேலும் இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பேஸ்புக் புக் போஸ்ட் ஒன்றும் போட்டு இருக்கிறது.

    அவர்களின் இந்த பேஸ்புக் போஸ்ட்டும் அதில் அவர்கள் வெளிட்டு இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் அந்த மருத்துவமனையை பாராட்டி வருகின்றனர்.

    கடைசி ஆசை

    கடைசி ஆசை

    சிட்னியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அந்த பெண் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனை நிர்வாகம் அவர் எப்போது வேண்டுமானாலும் மரணம் அடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அந்தப் பெண் கடைசியாக ஒருமுறை கடலை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். ஆனால் அந்த உடல் நிலையோடு கடலை பார்க்க அழைத்து செல்ல முடியாது என்று கூறியிருக்கின்றனர்.

    சர்ப்ரைஸ் கடல் விசிட்

    சர்ப்ரைஸ் கடல் விசிட்

    இந்த நிலையில் அந்த பெண் சிட்னியில் இருக்கும் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்காக ஆம்புலன்சில் கூட்டிச்செல்லப்பட்டார். அந்த மருத்துவமனைக்கு சொந்தமான குயிண்லேண்ட் ஆம்புலன்ஸ் நிறுவனம் சாதாரண வழியில் செல்லாமல் சுற்றி கடல் இருக்கும் பகுதி வழியாக சென்று இருக்கிறது. இந்த நிலையில் சிட்னியில் இருக்கும் 'ஹெர்வி பே' கடலுக்கு அருகில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை வெளியே இறக்கி கடலை காட்டி இருக்கின்றனர்.

    அழகான பேஸ்புக் போஸ்ட்

    இந்த நிலையில் அந்த அழகான சம்பவத்தை அவர்கள் புகைப்படமும் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இதை பேஸ்புக் போஸ்ட்டாக வெளியிட்டு உள்ளனர். இதன் காரணமாக ஒரே நாளில் அந்த பெண்ணும், அந்த மருத்துவமனை நிர்வாகமும் வைரல் ஆகி இருக்கிறது. அதேபோல் அந்த ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    உலகம் முழுக்க பிராத்தனை

    உலகம் முழுக்க பிராத்தனை

    இந்த நிலையில் அந்த போஸ்டுக்கு பலரும் உருக்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் பலரும் அந்த பெண் உடல் நலமடைய வேண்டும் என்றும் பிராத்தனை செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் அந்த பெண்ணுக்கு மிக முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    An Australian ambulance crew has carried a dying woman to hospital took a detour to grant her final wish which is to visit the beach one last time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X