India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மாஸ்டர் மைன்ட்!" எல்லாமே பொய்யாம்! புதின் உடல்நிலை எப்படி இருக்கு! போட்டு உடைக்கும் டாப் மருத்துவர்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து சமீப காலமாக வெளியாகும் தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ள நிலையில், டாப் மருத்துவர் ஒருவர் இப்போது கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த பிப். மாதம் முதலே உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்னும் கூட சண்டை முடியவில்லை.

    Vladimir Putin-க்கு உடல்நலம் பாதிப்பு உண்மையா? சந்தேகம் எழுப்பும் UK Doctor #World

    உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களைக் குறித்து வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

     புதின் உடல்நிலை

    புதின் உடல்நிலை

    உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. அதேநேரம் மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடந்த சில சம்பவங்கள் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

    புற்றுநோய்

    புற்றுநோய்

    இதனிடையே புதின் கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. 69 வயதாகும் புதினின் கனைய புற்றுநோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இதற்காக விரைவில் அவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்காக மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவனை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

     மிக மோசம்

    மிக மோசம்

    மேலும், புதினுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் விரைவாக இந்த ஆப்ரேஷன் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இது மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை என்பதால் புதினுக்கு எதாவது ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்கவும் ரஷ்யாவை நிர்வகிக்கவும் சிறப்பு கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்த இடைக்கால அமைப்பிடம் தான் ரஷ்யாவின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் இருக்கும் எனக் கூறப்பட்டது.

     சில ஆண்டுகள்தான்

    சில ஆண்டுகள்தான்

    சமீபத்தில், ரஷ்ய உளவு துறை அதிகாரி ஒருவரும் கூட புதின் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று கூறி இருந்தார். அதேபோல கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தொழிலதிபர் ஒருவர், ரத்த புற்றுநோய் காரணமாக புதினின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகக் கூறும் ஆடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

     சமீபத்திய வீடியோ

    சமீபத்திய வீடியோ

    பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளிலும் கூட புதினுடைய கால்கள் கண்ட்ரோல் இல்லாமல் ஆடிக் கொண்டே இருந்தது தெளிவாகப் பதிவாகி உள்ளது. இது அவருக்கு பார்கின்சன் இருப்பதைக் காட்டுவதாகச் சிலர் சந்தேகிக்கின்றனர். ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து வெளியாகும் இதுபோன்ற முன்னுக்குப் பிறனான தகவல்கள் சந்தேகத்தை எழுப்புகிறது. இவை போலி தகவல்களாகக் கூட இருக்கலாம் என்று சில மருத்துவர்கள் சந்தேகிகன்றனர்.

    சந்தேகம்

    சந்தேகம்

    இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ வல்லுநர் டாக்டர் கூறுகையில், "பெலாரஸ் அதிபர் உடனான சந்திப்பில் புதின் தனது ஒரு கையை சரியாக அசைக்கவில்லை என்பதால் அவருக்கு பார்கின்சன் இருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். இருப்பினும், இதை மட்டும் வைத்துக் கொண்டு அவருக்கு பார்கின்சன் இருப்பதாகக் கூற முடியாது. அவரது முகம் வழக்கம் போல இல்லை. அது உண்மை தான். ஆனால், இதை வைத்துக் கொண்டு நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. அவர்கள் நம்மைக் குழப்ப வேண்டும் என்பதற்காகக் கூட வேண்டுமென்றே இப்படிச் செய்து இருக்கலாம்.

    பிளான்

    பிளான்

    இதையெல்லாம் அவர்கள் அசால்டாகவே செய்வார்கள். அவர்கள் இதுபோன்ற டார்க் அர்ட்ஸ் முறைகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் புத்திசாலிகள். நாம் புதின் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று யோசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களே கூட இப்படிச் செய்யலாம்" என்று அவர் தெரிவித்தார். அதாவது உலக நாடுகள் புதின் வீக்காக இருக்கிறார் என்று எண்ண வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Putin may not have serious illness, top doctor raises the doubt: (புதின் உடல்நிலை லேட்டஸ்ட் அப்டேட்) All things to know about Putin's health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X