For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது! கொரோனாவை விரட்ட டான்சானியாவின் மூலிகை மருந்தா.. அதெல்லாம் நம்பாதீங்க மக்களே!

Google Oneindia Tamil News

டான்சானியா: டான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருந்து கோவிடால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு குணப்படுத்தும் என்றும் இதை டான்சானியா அரசு அனுமதித்துள்ளதாகவும் பல்வேறு செய்திகள் சமூகவலைதளங்களில் வந்தன. ஆனால் அவை தவறான தகவல்களாகும்.

Recommended Video

    Dexamethasone விலை மலிவானது..நம்ம ஊர் மருந்துக் கடைகளில் ரொம்பப் பிரபலம்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என ஆராய்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வருவதால் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

    இந்த நிலையில் டான்சானியாவில் ஒரு மூலிகை மருந்து கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்றும் அந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

    மிக மோசமான நாள்.. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா! மிக மோசமான நாள்.. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா!

    டான்சானியா

    டான்சானியா

    பேஸ்புக்கில் டான்சானியன் அதிபர் ஜான் மகுஃபூலி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் யும்மி ஆலி ம்வாலிமு ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய ஒரு தகவல் வந்துள்ளது. அதில் கோவிட் 19 நோயை குணப்படுத்தும் மருந்தை டான்சானியா அரசு கண்டுபிடித்துள்ளது. அதன் செயல்பாடு நன்றாக இருக்கிறது.

    நோயாளி

    நோயாளி

    அந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. நோயை குணப்படுத்தும் நாடு டான்சானியா என அந்த பேஸ்புக் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே நடத்திய ஆய்வில் அந்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது.

    கோவிடால் மருந்து

    கோவிடால் மருந்து

    கோவிடால் மருந்தானது இதுவரை எந்த மருத்துவ ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் அது கொரோனாவை குணப்படுத்தும் என்ற எந்தவிதமான விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது. டான்சானியன் அரசு அதுபோன்ற எந்த ஒரு மருந்துக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மருந்தானது டான்சானியா தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஆய்வாளர் ஹேமிஸ் மலிபோவால் கண்டறியப்பட்டது.

    சுகாதாரத் துறை அமைச்சகம்

    சுகாதாரத் துறை அமைச்சகம்

    கடந்த மே 11-ஆம் தேதி டான்சானியா பிராட்காஸ்டிங் சர்வீஸ் சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் இந்த கோவிடால் மருந்து பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன் பிறகுதான் கொரோனா வைரஸுக்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கோவிடால் என்றும் இதை டான்சானியன் சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது. எனவே கோவிடால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மூலிகை என்பது தவறான தகவல். இது போன்ற போலி செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    English summary
    Does this herbal medicine from Tanzania cure Covid 19? This FB post goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X