For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் எதிர்ப்புகளிடையே கனஜோராக நடைபெறும் சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா

எதிர்ப்புகளிடையே சீனாவில் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

யூலின்: சர்வதேச அமைப்புகள் பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கனஜோராக சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது.

சீனாவின் யூலினில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெறும். நாளொன்றுக்கு சுமார் 1,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படும்.

Dog meat festival opens in China despite controversy

இத்திருவிழா காலத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன. இத்திருவிழாவையொட்டி 'நாய் கடத்தல்'களும் நடந்தேறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந் நாய்கறி திருவிழாவுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் கடந்த 19-ந் தேதி முதல் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை சார்ந்த நாய் பலியிடுதலும் இத்திருவிழாவின் போது நடத்தப்படுகிறது. வரும் 30-ந் தேதி வரை நாய்க்கறி திருவிழா நடைபெறும்.

English summary
China's controversial dog meat festival started on Thursday in Yulin in South China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X