For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடியாத்தீ.... 'பப்பி' விழுங்கிய வைர மோதிரம் ரூ.18 லட்சமாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை விழுங்கிய நாய் கடைசியில் அதனை ஒருவழியாக வெளியேற்றி உரிமையாளர்கள் மனதில் பாலை வார்த்தது.

இங்கிலாந்தில் உள்ள டேவன் நகரைச் சேர்ந்த பெண் ஏஞ்சி கோலின்ஸ் (51). இவர் ஜோக் சீவெட் என்ற நாயை செல்லமாக வளர்க்கிறார்.

கடந்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தன்று தனது திருமண வைர மோதிரத்தை மேஜை மீது கழற்றி வைத்துவிட்டு நெயில் பாலிஸ் போட பக்கத்து அறைக்குப் போனார் ஏஞ்சி கோலின்ஸ். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த திருமண மோதிரத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.18 லட்சமாகும்.

பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டில் வளர்க்கும் நாயின் மலத்தை அங்கிருந்த அகற்றி சுத்தம் செய்யும்போது அதில் திருமண வைர மோதிரம் இருந்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அந்த மோதிரத்தை நாய் விழுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

மோதிரம் தங்களுக்கு மீண்டும் கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கோலினும் அவரது கணவர் கிரகாமும் தெரிவித்தனர். விலை உயர்ந்த மோதிரம் என்பதை விட தங்களின் திருமண மோதிரம் திரும்ப கிடைத்ததே அந்த தம்பதியரின் மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.

English summary
A woman had the diamond from her £18,000 ring eaten by a trainee police dog - but recovered it two days later, on Christmas Day.Jack chewed up Angie Collins's wedding ring and swallowed the diamond
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X