For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரும் என்னை போன்று கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீங்க: பில் கேட்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: யாரும் என்னை போன்று கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீர்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். கல்லூரியில் படித்து பட்டம் வாங்காவிட்டாலும் ஏராளமான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தவர். இந்நிலையில் அவர் படிப்பின் முக்கியத்துவம் குறித்து தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

படிப்பு பற்றி கேட்ஸ் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது,

கல்லூரி

கல்லூரி

நான் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலும் சாப்ட்வேர் துறையில் அதிர்ஷ்டவசமாக எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வேலை

வேலை

கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுபவர்களுக்கு நல்ல வேலை, அதிக வருமானம் கிடைப்பதுடன் அவர்கள் பட்டம் பெறாதவர்களை விட நல்ல வாழ்க்கை வாழக்கூடும். அமெரிக்க பொருளாதாரம் மேம்பட பட்டதாரிகள் பேருதவி செய்கிறார்கள்.

படிப்பு

படிப்பு

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்டதாரிகள் அதிக அளவில் இல்லை. அதிகமானோர் கல்லூரிக்கு செல்லவில்லை என்பது பிரச்சனை இல்லை. கல்லூரிக்கு செல்பவர்களில் பலர் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்க என்ன செய்வது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்வது நல்லது. கல்லூரி படிப்பு முக்கியம் என்று இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அண்மையில் தெரிவித்திருந்தேன் என்று எழுதியுள்ளார் கேட்ஸ்.

அறக்கட்டளை

அறக்கட்டளை

பில்கேட்ஸ் மற்றும் அவரது அறக்கட்டளை கல்லூரி படிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஒபாமா அரசும் கல்லூரி படிப்பை முடிப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Microsoft founder Bill Gates has asked the people to be a college graduate and he doesn't want anybody to be like him. Gates is a college dropout.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X