For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெனிசுலா பிரச்சினைக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!- வீடியோ

    மாஸ்கோ: வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    வெனிசுலாவில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நடக்கும் ஆட்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    அங்கு எப்போது வேண்டுமானாலும் ராணுவ புரட்சி நடக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே இதற்கான முயற்சியில் அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜுவான் காய்டோ ஈடுபட்டு வருகிறார்.

    41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ! 41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ!

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    வெனிசுலாவின் அதிபராக தற்போது நிகோலஸ் மதுரோ இருக்கிறார். ஆனால் அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜுவான் காய்டோ தன்னை கடந்த ஜனவரி மாதம் அதிபராக அறிவித்தார். ஆனால் நிகோலஸ் மதுரோ பதவி விலகவில்லை. இது உலக நாடுகளுக்கு இடையில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    அமெரிக்கா தலையீடு

    அமெரிக்கா தலையீடு

    இந்த நிலையில் இந்த பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டது. அதன்படி, வெனிசுலாவின் அதிபராக தற்போது நிகோலஸ் மதுரோ நீடிக்க கூடாது என்றது. எதிர்கட்சித் தலைவர் ஜுவான் காய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்தது. அமெரிக்காவிற்கு சில நாடுகள் ஆதரவு அளித்தது.

     ரஷ்யா எதிர்ப்பு

    ரஷ்யா எதிர்ப்பு

    ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யா மதுரோவிற்கு ஆதரவாக நின்றது. அதேபோல் ரஷ்யாவுடன் மேலும் சில நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக அணி திரண்டது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடைகளை வரிசையாக விதித்தது. இதனால் அங்கு கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது.

    ராணுவம்

    ராணுவம்

    இந்த நிலையில்தான் எதிர்கட்சித் தலைவர் ஜுவான் காய்டோ அந்நாட்டு ராணுவத்தின் சிறு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். இவர்கள் அங்கு ராணுவ புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். ராணுவத்தின் ஒரு குழு அவர் பக்கம் சென்றுள்ளது.

    தோல்வியில் முடிந்தது

    தோல்வியில் முடிந்தது

    ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அந்நாட்டில் ராணுவ ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அமெரிக்கா, இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்துப்படி, வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் அமெரிக்கா தனது ராணுவத்தை உள்ளே அனுப்பும் என்று குறிப்பிட்டுள்ளது.

    தாக்க தயார்

    தாக்க தயார்

    நாங்கள் எங்கள் ராணுவத்தை அனுப்ப தயார். அதற்கான சக்தியும், உரிமையும் எங்களிடம் உள்ளது. வெனிசுலாவின் அமைதியே எங்களுக்கு முக்கியம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தால்தான் அமெரிக்கா இப்படி செய்கிறது என்று உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.

    ரஷ்யா மோசம்

    ரஷ்யா மோசம்

    இதையடுத்து வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தும் முட்டாள்தனமான வேலையை செய்ய கூடாது என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்து இருக்கிறது. வெனிசுலாவை அவர்கள் போக்கில் விட வேண்டும். அமெரிக்கா தலையிட கூடாது என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் அமெரிக்க - ரஷ்யா இடையே மோதல் முற்றியுள்ளது.

    English summary
    Don't ever plan to overthrow Maduro's regime says Russia to USA today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X