For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?

இந்தியா ஐஎன்சி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் லட்வா, இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்த தமது கண்ணோட்டத்தை முன்வைத்தார்.

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா ஐஎன்சி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் லட்வா, இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் இங்கிலாந்து, இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்த தமது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா ஐஎன்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா ஐஎன்சி நிறுவனமானது முகம் தெரிந்த அல்லது அறியப்பட்ட எத்தனையோ நிறுவனங்களை ஊக்கப்படுத்தியும் வருகிறது.

Don’t miss the 5th Annual UK-India Leadership Conclave

பிரிக்சிட்டுக்கு பிந்தைய இங்கிலாந்து மற்றும் தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியா இடையேயான இருதரப்பு உறவுக்கும் இந்தியா ஐஎன்சி முக்கியப் பங்காற்றி வருகிறது.

உலகின் பொருளாதார ரீதியாக 5-வது மற்றும் 6-வது இடங்களில் உள்ள இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனடிப்படையில்தான் இங்கிலாந்து- பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒருங்கிணைப்பு மாநாடு ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது.

5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக ஒருங்கிணைப்பு மாநாட்டை இந்தியா ஐஎன்சி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இம்மாநாட்டில் இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் ஜூன் 22-ந் தேதி விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

சர்வதேச அளவில் தொழில்துறை, அரசியல், ராஜதந்திரம், கலாசாரம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கின்றர்.

இந்தியா- பிரிட்டன் விருதுகளை

காமன்வெல்த் எண்டர்பிரைஸ் மற்றும் முதலீட்டு கவுன்சில் தலைவர் லார்ட் மார்லாண்ட்,

சர்வதேச வர்த்தகத்துக்கான இணை செயலாளர் பாரி கார்டினர் எம்பி

சர்வதேச அபிவிருதிக்கான முன்னாள் இணை செயலாளர் பிரிதி படேல் எம்பி

பார்தி எண்டர்பிரைசஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டர்

எழுத்தாளர் பர்கா தத்

ஸ்டார்கவுண்ட் தலைமை செயல் அதிகாரி எட்வினா டன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்/

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மிகவும் அதிக அளவில் பங்காற்றிய 100 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட இருக்கின்றனர்.

தூதரக கோப்பை: காமன்வெல்த் பிரமுகர்கள் பங்கேற்கும் ஒருநாள் கோல்ப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிரிட்டன் ஏசியன் டிரஸ்ட் உதவியுடன் இது நடத்தப்படுகிறது.

பிரிக்சிட் வரை இங்கிலாந்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் வர்த்தக உறவை கொண்டுள்ளது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்பு 1991-ம் ஆண்டு இந்தியா தமது பொருளாதார நிலைமையை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான உயிர்ப்புடனான பாலமாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.

இருநாடுகளிடையேயான நல்லுறவு தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு. இந்தியா- இங்கிலாந்து இடையேயான தொழில்துறை மற்றும் சர்வதேச உறவுகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த ஒருங்கிணைப்பு மாநாட்டில் விவாதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நுழைவு வாயிலாக திகழுகிறது இங்கிலாந்து. இந்த வகையில் இங்கிலாந்து முட்டுக்கட்டைகளை தகர்த்து இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும்.

21-ம் நூற்றாண்டில் இருநாடுகளிடையேயான அரசியல், பொருளாதார உறவுகளில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்யக் கூடிய வகையில் இம்மாநாடு அமையும். வளர்ச்சி, கல்வி, தொழில்நுட்படம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.

English summary
India Inc. Founder & CEO Manoj Ladwa presents a sneak-peek into a landmark event aimed at enhancing the UK-India strategic relationship, focusing on the road ahead as Global Britain meets Global India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X