For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்துக் கணிப்பை விடுங்க.. கூகுள் டிரெண்டில் விஜயகாந்த் பாணியில் பட்டையை கிளப்பும் ட்ரம்ப்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றிருக்கலாம்; ஆனால், கூகுள் டிரெண்டில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்தான் ஹாட்டாக தேடப்பட்டு வருகிறார்.

அதிபர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தொடர்ந்து கருத்து கணிப்பு வந்தபடியே உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே ஹிலாரி கிளிண்டன் இதில் முன்னணியில் இருந்தார். ஆனால் இடையில் அவர் மீது இ-மெயில் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதனால் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

Donald Trump beats Hillary Clinton in Google searches ahead of US election

இந்நிலையில் தற்போது வெளியான இறுதி கட்ட கருத்துக் கணிப்புகள்படி, ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் கூகுளில் நிலைமை வேறு. அங்கு டொனால்ட் ட்ரம்புக்குதான் டிமாண்ட் அதிகம்.

திங்கள்கிழமை வரையிலான நிலவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் 38 மாகாணங்களில் டிரம்ப் பற்றிதான் அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதில் இழுபறி மாகாணம் என அழைக்கப்படும், புளோரிடாவும் உள்ளடக்கம்.

தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், திமுக தலைவர் கருணாநிதியைவிட, தேமுதிக தலைவரும், மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த்தை பற்றி மக்கள் அதிகம் தேடி படித்தனர் என்று கூகுகள் டிரெண்ட் கூறியிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மக்கள் நல கூட்டணி படுதோல்வியைத்தான் சந்தித்தது.

அமெரிக்காவின் விஜயகாந்த்தாக டொனால்ட் ட்ரம்ப் மாறுவாரா அல்லது, அசத்துவாரா என்பதை இன்னும் சில மணி நேரங்கள் கழித்து உலகம் அறியும்.

English summary
Donald Trump might be trailing in surveys but the Republican nominee is more popular than his Democratic rival Hillary Clinton in Google searches in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X