For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரை நச்சுப்பாம்பு என்று வர்ணித்த டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்று விஷமத்தனமாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட டொனால்ட் டிரம்ப், தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை நச்சுப் பாம்புகள் என்று வர்ணித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் பிற நாட்டவர்கள் மீது தொடர்ந்து விஷத்தைக் கக்கி வருகிறார் டிரம்ப்.

சமீபத்தில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார். வெளிநாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற விடக் கூடாது. அவர்களை அமெரிக்காவுக்குள்ளேயே நுழைய அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தார்.

நச்சுப் பாம்புகள்

நச்சுப் பாம்புகள்

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டவர்களை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

பாம்புப் பாட்டு

பாம்புப் பாட்டு

யங்ஸ்டவுன் விமான நிலையத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஏஎல் வில்சன் எழுதிய தி ஸ்னேக் என்ற நூலிலிருந்து சில வரிகளைப் படித்தார்.

காப்பாற்றியவரைக் கடித்த பாம்பு

காப்பாற்றியவரைக் கடித்த பாம்பு

அந்தக் கதையில், உடம்புக்கு முடியாமல் போன பாம்பு ஒன்றை ஒரு பெண் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று வளர்க்கிறாராம். ஆனால் குணமடைந்ததும் அந்தப் பாம்பு அப்பெண்ணையைக் கடித்து விட்டதாம்.

கவனமாக இருக்க வேண்டும்

கவனமாக இருக்க வேண்டும்

இந்தக் கதையைக கூறி டிரம்ப், எனவே நமது வீட்டுக்குள் (அமெரிக்காவுக்குள்) யாரை விடுவது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சுவர் எழுப்புவேன்

சுவர் எழுப்புவேன்

வெளிநாட்டினர் நமது நாட்டுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுவர் எழுப்புவேன். இதன் மூலம் மத்திய அமெரிக்கர்கள் உள்ளேவர முடியாது.

சிரியாவிலும்

சிரியாவிலும்

அதேபோல சிரியாவிலும் ஒரு சுவர் எழுப்பப்படும். அதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றார் டிரம்ப்.

இன்றைய வாக்கெடுப்பில்

இன்றைய வாக்கெடுப்பில்

டிரம்ப் இன்று ஓஹையோ, புளோரிடா, இல்லினாய்ஸ், மிசவுரி, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பில் கலந்து கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அவர் உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Republican presidential front-runner Donald Trump has a way with words and definitely knows how to rub people the wrong way. After his controversial statement that Muslim immigrants must not be allowed to enter US, Trump likened immigrants to a poisonous snake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X