For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா ஒரு வரி மன்னனாம்.. அமெரிக்க அதிபர் கிண்டல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியா நூறு சதவீதம் அதிகரிப்பதாக டிரம்ப் அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்க தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இந்திய வரி விதிப்பு குறித்து அவ்வப்போது அதிருப்தி, வெளிப்படுத்தி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.

பேட்டி

பேட்டி

இந்தநிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், தன்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

பல நாடுகள்

பல நாடுகள்

இந்தியா மட்டுமின்றி ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுடன் என்னென்ன மாதிரியான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன, என்பது குறித்த பட்டியலை அப்போது டொனால்டு டிரம்ப் வெளியிட்டார்.

வரிகளின் மன்னன்

வரிகளின் மன்னன்

அப்போது, 'இந்தியா வரிகளின் மன்னன்' என்று டொனால்டு டிரம்ப் வர்ணித்தார். அமெரிக்க பொருட்கள் மீதான அதிகப்படியான வரிகளை மனதில் வைத்து இவ்வாறு கிண்டலாக தெரிவித்தார்.

இங்கேயும் வரிதான்

இங்கேயும் வரிதான்

அமெரிக்க பொருட்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் எல்லாவற்றுக்கும் வரி, வரி, வரி என்பது அவருக்குத் தெரிந்திருக்குமோ, தெரியாதா தெரியவில்லை.

English summary
India wants to start trade talks with the US "immediately", US President Donald Trump said on Monday at a press conference to announce a trade deal struck between the United States, Mexico and Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X