For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்

Google Oneindia Tamil News

லாஸ்வேகாஸ்: கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்றும் பவுசி அமெரிக்காவின் பேரிடர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்னிறுத்தியே ஜோ பிடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

இந்த நிலையில் லாஸ்வேகாஸில் இன்றைய தினம் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2.15 லட்சம் அமெரிக்கர்கள் இதுவரை இறந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி நிபுணரும் டாக்டருமான ஆன்டனி பவுசியும் (இவர் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினரும் ஆவார்) சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் ஆவர்.

நாட்டை மீட்க

நாட்டை மீட்க

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் மோசமாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதனால் சுகாதார பேரிடரிலிருந்து நாட்டை மீட்க உறுதியளிக்கிறேன்.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

பவுசி மட்டும் இன்னும் சுகாதாரத் துறையின் பொறுப்பாளராக இருந்திருந்தால் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பலியாகியிருக்கக் கூடும். மக்கள் கொரோனாவால் அசதி அடைந்துள்ளார்கள். மக்கள் பவுசி மற்றும் மற்ற சுகாதாரத் துறை முட்டாள்களின் பெயரை கேட்டு சோர்வடைந்துவிட்டார்கள்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

பவுசி நல்லவர்தான். அவர் இங்கு 500 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் பேச்சை கேட்டால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். நாம் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்றார். கொரோனா வைரஸ் வந்த காலத்தில் டிரம்ப் யாருடைய பேச்சையும் கேட்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
US President Donald Trump makes baseless coronavirus claims on Dr Fauci and health officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X