• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி

|

பீஜிங்: இந்தியா-சீனா இடையேயான பிரச்சினையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்று அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

  China-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார் | John Bolton Statement

  10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

  இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில சேனல் ஒன்றுக்கு ஜான் போல்டன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் ட்ரம்ப் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது பற்றியான பல்வேறு தகவல்களை அவர் விவரித்துள்ளார்.

  அமெரிக்க அதிபர் தேர்தல் வரைதான், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்துவாரே தவிர, பிறகு நிலைமை மாறிவிடும் என்று அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஜான் போல்டன் பேட்டியை இதோ பாருங்க:

  சீனாவை நம்ப முடியாதுனு சொன்னது சரியாகிடுசே!.. படைகளை முழுவதுமாக வாபஸ் பெறவே இல்லை.. ஆதாரம் இதோ!

  ட்ரம்ப்புக்கு தெரியாது

  ட்ரம்ப்புக்கு தெரியாது

  இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக முழு விபரமும் டொனால்டு டிரம்ப்புக்கு தெரியும் என்று நான் நம்பவில்லை. இதற்கு முன்பாக இரு நாடுகளிடையே நடைபெற்றுள்ள இந்த எல்லை மோதல்கள் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. இந்த விஷயங்கள் தொடர்பாக அவருக்கு அதிகாரிகள் சில தகவல்களை தெரிவித்து இருக்கலாம். ஆனால் முழு தகவலையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது.

  வியாபாரம்தான் முக்கியம்

  வியாபாரம்தான் முக்கியம்

  டொனால்ட் ட்ரம்ப்பை பொருத்த அளவில் வணிகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய நபர். எனவே, அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு பிறகு, எந்த பக்கமாக அவர் சாய்வார் என்பதை நம்மால் இப்போது கணித்து விட முடியாது. அவர் மறுபடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா பற்றி அவர் விமர்சிக்க மாட்டார். சீனாவுடன் மிக அதிக அளவுக்கு வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தான் டொனால்ட் டிரம்ப் விருப்பப்படுவார்.

  அதிபர் பிஸி

  அதிபர் பிஸி

  அடுத்த 4 மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அவர் அதில் படுபயங்கர பிஸியாக இருப்பார். எனவே தேர்தலுக்கு முன்பாக இந்தியா-சீனா விவகாரத்தில் அவர் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க மாட்டார். அவ்வாறு எடுப்பது அவருக்கு மேலும் சிக்கலை வரவழைத்து விடும் என்பதால் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் கையாள்வார். எனவே உடனடியாகவும், அமெரிக்காவின் ஆதரவை, இந்தியா எதிர்பார்க்க முடியாது.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  சீனாவுடன் நட்பு அவசியம்

  சீனாவுடன் நட்பு அவசியம்

  முன்னதாக, எல்லையில் பல்வேறு பகுதிகளிலும் சீன படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. இந்தியாவின் ராஜதந்திர முயற்சி மற்றும் சீன பொருட்கள் மீதான தடை போன்ற விவகாரங்களால் சீனா பின் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜான் போல்டன் கருத்துப்படி, இந்தியா, அமெரிக்காவை முழுக்க நம்பி இருக்கவே முடியாது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. எனவே, பிற நாடுகளுடனான நட்புறவு மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இவற்றின் மூலமாகத்தான் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Donald Trump may not back India in case of conflict with China, says Former US NSA John Bolton.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X