For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்களும் வேண்டாம், உங்க வேலையும் வேண்டாம்.. ட்ரம்ப் ஆலோசகர் அதிரடி ராஜினாமா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசகராக இருந்த செபாஸ்டியன் கோர்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிகர் ட்ரம்ப்பின் ஆலோசகர் மற்றும் உதவி பாதுகாவலராக இருந்த செபாஸ்டியன் கோர்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி மீது அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கமாகி வருகிறது. அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் அதிபர் ட்ரம்ப்பின் உதவி பாதுகாவலராகவும் கடந்த ஜனவரி மாதம் செபாஸ்டியன் கோர்கா நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு நேற்று வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தள்ளிப்போட்ட ராஜினாமா

கடந்த ஏப்ரல் மாதமே கோர்கா ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனால் அப்போது அதிபர் டிரம்ப் மற்றும் தலைமை உத்தியியலாளர் ஸ்டீவ் பேனான் ஆகியோர் கேட்டுக்கொண்டதை அடுத்து ராஜினாமா செய்யாமல் பணியை தொடர்ந்துள்ளார்.

 நேற்று வெளியேறினார்

நேற்று வெளியேறினார்

இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டீவ் பேனான் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குள் செபாஸ்டியன் கோர்காவும் ராஜினாமா செய்துள்ளார்.

 நீக்கமா?

நீக்கமா?

எனினும் கோர்கா ராஜினாமா செய்யப்படவில்லை என்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் எப்போதோ வெள்ளை மாளிகைப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 முன்னாள் செய்தி ஆசிரியர்

முன்னாள் செய்தி ஆசிரியர்

இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிய கோர்கா அடிக்கடி ஊடகங்களில் தலைகாட்டுபவர். அதிபரின் உதவி பாதுகாவலராக நியமிக்கப்படும் முன்னர் அவர் சர்வதேச செய்தி ஊடகமான ப்ரேய்ம்பார்ட்டின் செய்தி ஆசிரியராக இருந்துள்ளார்.

English summary
Sebastian Gorka, an adviser to President Trump, has exited the White House but white house cleared that he did not resign, but he is no longer works at white house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X