For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பூமியைக் கடக்கும் ராட்சத விண்கல்.. மனிதகுலமே அழியும் என பீதி.. மறுக்கிறது நாசா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்தில்லை என அது விளக்கமளித்துள்ளது.

சுமார் 270 மீ சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த விண்கல் குறித்து ஏற்கனவே பல்வேறு பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன.

மோதினால் பூமி அழியும்

மோதினால் பூமி அழியும்

இந்த விண்கல் பூமி மீது மோதப் போகிறது. அப்படி மோதினால், பூமியே அழிந்து விடும். மனித குலமே மண்ணாகப் போகிறது என்று தகவல் பரவி உள்ளது. இதனால், சில நாடுகளில் மக்கள் அழிவிற்கு ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர். கடைசி கடைசியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் மன நிலை போய் விட்டது.

உண்மைதான், ஆனால் அழியாது

உண்மைதான், ஆனால் அழியாது

இந்நிலையில், இந்த விண்கல் நாளை பூமியைக் கடக்கப் போவது உண்மை தான், ஆனா அதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

அப்படியேதான் இருப்போம்

அப்படியேதான் இருப்போம்

இந்த விண்கல் பூமியைக் கடந்த பின்னரும் கூட பூமி அப்படியேதான் இருக்கும். நாம் தொடர்ந்து நல்லபடியாக இருப்போம் என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

இப்போதைக்கு எதுவும் மோதாது

இப்போதைக்கு எதுவும் மோதாது

இப்போதைக்கு பூமி மீது மோதும் அளவில் எந்த ஒரு விண்கல்லோ, வால் நட்சத்திரமோ இல்லை என்றும் நாசா ஆறுதல் தெரிவித்துள்ளது.

கடவுள் துகள் ஆய்வகத்தால் ஆபத்தா?

கடவுள் துகள் ஆய்வகத்தால் ஆபத்தா?

அதேசமயம், கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்காக உருவாக்கப்பட்ட லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர், தனது ஈர்ப்பு சக்தி காரணமாக மிகப் பெரிய விண்கல்லை பூமியை நோக்கி இழுக்கப் போவதாகவும் ஒரு பீதி கிளம்பியுள்ளது. ஆனால் இதையும் நாசா மறுத்துள்ளது.

ஜெனீவா அருகே

ஜெனீவா அருகே

ஜெனீவா அருகே பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் இந்த மிகப் பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA has confirmed that a massive asteroid will zoom past Earth tomorrow, but reassured the world that it is not a threat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X